விஜய் டிவி “ஈரமான ரோஜாவே” நடிகர் திரவியத்திற்கு கிடைத்த வாய்ப்பு – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
விஜய் டிவி
விஜய் டிவி "ஈரமான ரோஜாவே" நடிகர் திரவியத்திற்கு கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய் டிவி “ஈரமான ரோஜாவே” நடிகர் திரவியத்திற்கு கிடைத்த வாய்ப்பு – ரசிகர்கள் வாழ்த்து மழை!

சின்னத்திரையில் சீரியல்களில் அறிமுகமாகி தங்களது திறமையால் எட்டாத உயரத்திற்கு சென்றவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வரும் நடிகர் திரவியம் தற்போது தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதனால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

நடிகர் திரவியம்:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு சில புதிய சீரியல்களில் திறமையான பல புதிய முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். அதன் மூலம் அவர்களுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களில் நடித்து பல பிரபலங்கள் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் இருக்கின்றனர்.

அம்மாவின் பாசத்திற்காக ஏங்கும் வாணி – கொடுமை செய்யும் சித்தி! விஜய் டிவியில் புதிய நெடுந்தொடர்!

இந்நிலையில் விஜய் டிவி ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்தவர் நடிகர் திரவியம். அவருக்கு ஜோடியாக நடிகை பவித்ரா நடித்து வந்தார். முன்னணி சீரியல்கள் வரிசையில் இந்த சீரியல் இருந்தது. அதன் பின் அந்த சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டாம் சீசனில் திரவியம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அண்ணன் தம்பிகள் அக்கா தங்கை என நான்கு பேர் இருக்க ஒரு சூழ்நிலையால் அண்ணன் தங்கையையும், தம்பி அக்காவையும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

கோபியை திட்டி தீர்த்த செழியன் – சமாளிக்க முடியாமல் கதிகலங்கிய கோபி! ப்ரோமோ ரிலீஸ்!

அதனால் நான்கு பேரும் தங்களுக்கு பிடிக்காத வாழ்க்கையை தொடங்கி எப்படி வாழ போகிறார்கள் என்பதே கதையாக இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கி சில வாரங்கள் மட்டுமே ஆன நிலையில் சீரியலில் ஜீவா காவ்யா ஜோடிக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில் திரவியம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் தெலுங்கில் ‘வண்டலக்கா’ என்கிற சீரியலில் நடிக்க இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது, இந்த சீரியல் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!