ஷூட்டிங் நேரத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகைகள் செய்த காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் மகா சங்கமம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஷூட்டிங்கின் போது தனம், முல்லை, மீனா மூவரும் ஆட்டம் போடும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. மேலும் சீரியல்களில் நடிக்க வரும் நடிகர், நடிகைகள் அனைவருக்குமே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. சீரியல்களில் அறிமுகமாகி சில நாட்களிலேயே திரைப்பட வாய்ப்புகளை பெற்று வளர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் டிஆர்பியிலும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் முன்னிலையில் இருந்து வருகிறது.
ராதிகாவை பார்க்க கோபியை வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!
மக்களின் ரசனையை அறிந்துகொண்டு காமெடி, கலாட்டா, குடும்ப சண்டைகள், பாச போராட்டங்கள், காதல் காட்சிகள் என அனைத்தையும் ஒரே சீரியலில் காட்டி வருவதால் மக்கள் சலிக்காமல் விஜய் தொலைக்காட்சி சீரியல்களை கண்டு ரசித்து கொண்டிருக்கின்றனர். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிற்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதாவது கூட்டி குடும்ப வாழ்க்கையை அழகாக தத்ரூபமாக மக்களுக்கு எடுத்து காட்டி கொண்டிருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் என்ன பிரச்சனைகள் வந்தாலும் கூட குடும்பத்தில் உள்ள அனைவரும் அதனை சமாளித்து ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். ஷூட்டிங் போக மீத நேரம் முழுவதையும் அரட்டையடித்து கொண்டிருக்கின்றனர். தற்போது ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்காக பாக்கியாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் மகா சங்கமம் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. தற்போது ஷூட்டிங்கின் போது தனம், முல்லை, மீனா அனைவரும் பேஷன் ஷோ போகும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.