ராதிகாவை பார்க்க கோபியை வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!

0
ராதிகாவை பார்க்க கோபியை வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் பாக்கியா - ப்ரோமோ ரிலீஸ்!
ராதிகாவை பார்க்க கோபியை வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் பாக்கியா - ப்ரோமோ ரிலீஸ்!
ராதிகாவை பார்க்க கோபியை வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!

ராதிகா ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளுக்காக பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார். அப்போது கோபி ராதிகாவை பார்த்ததும் தப்பியோடுவதால் கோபியை வலுக்கட்டாயமாக ராதிகாவை பார்க்க பாக்கியா கூட்டி செல்லும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. ராமமூர்த்தி தாத்தாவின் 75 ஆவது பிறந்தநாள் விழாவிற்கு ராதிகாவையும் வர சொல்லி பாக்கியா அழைத்திருக்கிறார். இத்தனை நாட்களாக எனது வருங்கால கணவரை உங்களுக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால், இந்த முறை கண்டிப்பாக பிறந்தநாள் விழாவிற்கு அவரையும் அழைத்து வந்து அறிமுகம் செய்து வைக்கிறேன் என ராதிகா கூறுகிறார். ராதிகா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டால் அனைத்து உண்மைகளும் தெரிந்துவிடும்.

5 வருட இடைவெளிக்கு பிறகு சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் மகிழ்ச்சி!

இதனால் ராதிகாவை வர விடாமல் தடுக்க நெஞ்சு வலிப்பது போல ராதிகா நாடகமாடுகிறார். நெஞ்சு வலிக்கிறது என்று சொன்னதுமே ராதிகா நீங்கள் வீட்டிலேயே ரெஸ்ட் எடுங்கள் நான் மட்டும் நிகழ்ச்சிக்கு சென்று வருகிறேன் என ராதிகா கூறிவிடுகிறார். இது ஒரு புறம் இருக்க மறு புறம் ராதிகா பிறந்தநாள் விழாவிற்கு வரும்போது எப்படியாவது தப்பியோடி விட வேண்டும் என கோபி ரெடியாக இருக்கிறார். ராதிகா வீட்டிற்கு வரும் போது சரியாக வீட்டில் பின் பக்கம் சுவரேறி குதித்து தப்பித்து ஓடுகிறார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என பாக்கியா கேட்ட போது வீட்டில் கூட்டம் அதிகமாக இருப்பதால் தான் இப்படி செல்கிறேன் என கூறி மழுப்புகிறார்.

Exams Daily Mobile App Download

பின்பு, ராதிகா வீட்டிற்கு வந்ததும் கோபியை பாக்கியா அழைக்கிறார். ராதிகாவை வந்து பாருங்கள் என கூறுகிறார். ஆனால், கோபி நான் ராதிகாவை சந்திக்க மாட்டேன் என கூறி மல்லுக்கட்டுகிறார். ஏன் ராதிகாவை மட்டும் சந்திக்க இவ்வளவு பயப்படுகிறீர்கள். ராதிகாவின் வீட்டு வாசப்படி வரைக்கும் வருகிறீர்கள். ஆனால், வீட்டிற்குள் வர மாட்டேங்குறீர்கள் என குடும்பத்தில் உள்ள அனைவருமே கேட்கிறார்கள். கோபி என்ன பொய் சொல்லி தப்பிக்கலாம் என சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். இந்நிலையில், கோபியை பாக்கியா வலுக்கட்டாயமாக ராதிகாவை பார்க்க அழைத்து செல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. எனவே ராதிகா கோபியை பார்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here