‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ - குவியும் லைக்குகள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ - குவியும் லைக்குகள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடித்து வரும் நடிகை ஹேமா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள ரீல்ஸ் ஒன்றை செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோவிற்கு ரசிகர்களிடம் இருந்து லைக்குகள் குவிந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியலாகும். கூட்டுக் குடும்ப பாசத்தையும் அண்ணன், தம்பிகளின் நெருக்கத்தையும் மையமாக வைத்து கதைக்களம் சென்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் அத்தனை கதாபாத்திரங்களும் சீரியல் போல் அல்லாமல் நிஜ குடும்பம் என்பது தான் போல் நடிப்பார்கள். மேலும் தமிழக குடும்பங்களில் அன்றாடம் நடப்பது போன்ற காட்சிகள் தான் சீரியலில் வரும். அனைவருமே விட்டுக் கொடுத்து போகும் குடும்பத்தில் ஒருவர் மட்டும் அனைத்திற்கும் வம்பு செய்து வருவார்.

விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுத்த “குக் வித் கோமாளி” கனி – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

அது போன்று சீரியலில் வரும் கதாபாத்திரம் தான் மீனா. மீனாவும், ஜீவாவும் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். வசதியான வீட்டு பெண்ணாக வளரும் மீனா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் எந்த விஷயத்திலும் ஒட்டாமல் தனித்து இருப்பார். இதனால் மீனாவிற்கு, ஜீவாவிற்கும் அடிக்கடி நடக்கும் சண்டைகள் சீரியலில் மிகவும் பிரபலம். இதனால் இந்த ஜோடிக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மீனாவை அந்த வீட்டில் அனைவரும் கவனித்து கொள்ளும் விதத்தை பார்த்து நாளடைவில் மீனாவே ஜீவா குடும்பத்துடன் ஒட்ட தொடங்கி விடுவார்.

பாரதி, கண்ணம்மாவை 6 மாதம் சேர்ந்து வாழ உத்தரவிடும் நீதிபதி, உற்சாகத்தில் சௌந்தர்யா – பரபரப்பு ப்ரோமோ!

இருந்தாலும், மீனா செய்யும் சேட்டைகள் மட்டும் சீரியலில் குறையாமல் இருந்தது. இதனால் மீனா வரும் காட்சிகள் மிகவும் கலகலப்பாக இருக்கும். மீனாவாக நடித்து வரும் ஹேமாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக அதிக ரசிகர்கள் கிடைத்துள்ளனர். ஹேமா சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிசியாக இருப்பார். அவ்வப்போது வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவார். தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இன்ஸ்டாகிராமில் சமீப காலமாக ட்ரெண்டிங்கில் சென்று கொண்டிருக்கும் எமோஜி ரியாக்ஷன் ரீல்ஸ் செய்து தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹேமா கொடுக்கும் எமோஜி ரியாக்ஷன் மிகவும் கியூட்டாக இருப்பதாக கூறி ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!