விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுத்த “குக் வித் கோமாளி” கனி – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள சவுண்ட் பார்ட்டி ரியாலிட்டி நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி வின்னர் கனி கலந்து கொண்டுள்ளார்.
சவுண்ட் பார்ட்டி:
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதனை தக்கவைத்து கொள்ள விஜய் டிவி நட்சத்திரங்களை கொண்டு புதிதாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் பொழுதுபோக்கில் ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் கொரோனா ஊரடங்கின் போது மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்த நகைச்சுவை சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வின்னராக நடிகை வனிதா விஜயகுமார் இருந்தார்.
இரண்டாவது சீசன் தொடங்கப்பட்ட நிலையில் அதன் டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டார். அவர் இயக்குனர் திருவின் மனைவியும், இயக்குனர் அகத்தியனின் மகளும் ஆவார். மேலும் சென்னை 28 படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமியின் அக்கா ஆவர். அவரது சமையல் திறமையை பாராட்டி அவருக்கு இந்த வெற்றி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதன் பின் விஜய் டிவி நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. மேலும் தனியாக சமையல் குறிப்புகள் போட யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்க ஹீரோ அருண் வாங்கும் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவியில் சவுண்ட் பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் அறிமுகமாக இருக்கிறார். இந்த நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் அதில் ஆண், பெண் என இரண்டு டீமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் பெண்கள் டீம் தலைவராக கருணாஸ் மனைவி, கிரேஸ் இருக்கிறார். ஆண்கள் டீம் தலைவராக மதுரை முத்து இருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக மாகாபா ஆனந்த் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.