விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & ஐஸ்வர்யா செய்துள்ள காரியம் – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் சேர்ந்து ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி குறுகிய காலத்தில் எக்கச்சக்க ரசிகர்களை பெற்றிருக்கும் ஒரு ரீல் ஜோடி நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கடைக்குட்டியாக கண்ணன் என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவண விக்ரமிற்கு ஜோடியாக சமீபத்தில் அறிமுகமானவர் தான் விஜே தீபிகா.
தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழும் ‘பாரதி கண்ணம்மா’ பரீனா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பாக சில டிவி சேனல்களில் விஜேவாக பணியாற்றி வந்த இவருக்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சில மாதங்கள் மட்டுமே ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ஐஸ்வர்யாவாக பயணித்த விஜே தீபிகா சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகினார். இப்போது, திரைக்கு பின்னால் நல்ல நண்பர்களாகி பழகி வரும் நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் ஒன்றாக இணைந்து யூடியூப் சேனலை துவங்கி அதன் மூலம் தங்களது ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
டிவி ஸ்டேஷனாக மாறும் ‘பிக்பாஸ்’ வீடு, மீண்டும் சண்டையிடும் தாமரை & ப்ரியங்கா – ப்ரோமோ ரிலீஸ்!
அந்த வகையில் தற்போது நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் இணைந்து குத்து பாடல் ஒன்றுக்கு நனடமாடி அந்த வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்களிடம் இருந்து ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. மேலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இந்த கண்ணன், ஐஸ்வர்யா ஜோடியை மிஸ் செய்து வந்த ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை கண்குளிர பார்த்து ரசித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.