முடிவை நோக்கி பயணிக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – விரைவில் சீசன் 2 அறிமுகம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
முடிவை நோக்கி பயணிக்கும் 'பாக்கியலட்சுமி' சீரியல் - விரைவில் சீசன் 2 அறிமுகம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
முடிவை நோக்கி பயணிக்கும் 'பாக்கியலட்சுமி' சீரியல் - விரைவில் சீசன் 2 அறிமுகம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
முடிவை நோக்கி பயணிக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – விரைவில் சீசன் 2 அறிமுகம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பாக்கியாவின் கணவர்தான் கோபி என்கிற உண்மையை ராதிகா அறிந்து கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் பாக்கியலட்சுமி தொடர் முடிவடையும் போவதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவிடம் கோபி எப்போதுதான் மாட்டுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பாக்கியாவிடம் மாட்டுவது போல வந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார். தற்போது கூட மயூவின் பிறந்த நாளுக்காக பாக்கியாவை சமைக்கச் சொல்லி பாக்கியாவினை தேடி ராதிகா வந்திருந்தார்.

பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியிடம் வசமாக சிக்கிய கில்லாடி கோபி – அடுத்த திருப்பம் என்ன?

அப்போது உன் புருஷனை மட்டும் எங்களது கண்ணில் காட்டவே மாட்டேங்கிறாய் என செல்வி கேட்கிறார். உடனே ராதிகா மொபைல் போனில் கோபியின் புகைப்படம் ஏதேனும் இருக்கிறதா என தேடுகிறார். ஆனால், ராதிகாவின் மொபைல்போனில் கோபியின் புகைப்படம் ஏதும் இல்லாத காரணத்தினால் ராதிகாவிடம் இருந்து தப்பித்து விடுகிறார். நான் உங்களுக்கு நேரிலேயே அவரை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். அதற்குப் பிறகு ராதிகா கோபியிடம் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது எனக் கூறுகிறார். எனக்கு சர்ப்ரைஸ்ஸா என்ன அது என கேட்கிறார். உடனே கோபியிடம் ராதிகா, உங்களை பாக்கியாவிடம் நான் அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன் எனக்கூறிய உடனே கோபிக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்து விடுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடிக்கும் சுஜிதாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

ராதிகா, நீங்கள் ஏன் பாக்கியாவை பார்த்து இப்படிப் பயப்படுகிறீர்கள் என கேட்கிறார். எப்போதுதான் ராதிகா பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை தெரிந்து கொள்ளப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்த பிறகாவது கோபியை விட்டு ராதிகா விலகுவாரா அல்லது பாக்கியாவிடம் இருந்து கோபியை பிரித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாக்கியலட்சுமி தொடர் முடிவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் பாக்கியலட்சுமி தொடரின் சீசன் 2 ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சீசன் 2வில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா நடிக்க மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக புதிய நாயகி அறிமுகமாக இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here