பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடிக்கும் சுஜிதாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடிக்கும் சுஜிதாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடிக்கும் சுஜிதாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடிக்கும் சுஜிதாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி தொடர்களில் ஆயிரத்துக்கும் மேலான எபிசோடுகளை கடந்து இன்று வரை வெற்றி பயணத்தில் தொடர்கிறது என்ற பெருமையை கொண்டது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். அப்பேற்பட்ட சீரியலில் நடிக்கும் பிரபல நடிகை உடன் இருக்கும் சக நடிகர்களை காட்டிலும் அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு நாள் சம்பளம்:

சீரியல் என்றாலே அடுத்தவர் குடும்பத்தை கெடுக்க நினைக்கும் வில்லிகள், பரம எதிரிகளை அழிக்க துடிக்கும் வில்லன்கள், மாமியார் மருமகள் சண்டை என அறுத்ததையே அறுக்காமல் புதிதாக அண்ணன் தம்பிகளின் பாசம், அம்மா போன்ற அண்ணியின் அளவுகடந்த அன்பு, அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவுக்கும் மருமகள்களின் ஒற்றுமை, குடும்பத்தை கெடுக்க குடும்பத்தில் உள்ளவர்களே செய்யும் சதிகள் என உண்மை நிகழ்வுகளை மிகவும் அழகாக இயக்கி விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணியளவில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

இந்தியாவில் மொத்தம் 8 மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தமிழக ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற ஒன்றாக வலம் வருகிறது. இத்தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கென தனி ரசிகர் கூட்டங்களே உள்ளது. இந்நிலையில், தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு வழங்கும் ஒரு நாள் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, அண்ணன் ஒரு நாளைக்கு ரூபாய் 12 ஆயிரமும், தம்பி ஜீவா ஒரு நாளைக்கு ரூபாய் 10 ஆயிரமும், அவரது மனைவி மீனா ஒரு நாளைக்கு ரூபாய் 8 ஆயிரமும், இரண்டாவது தம்பி கதிர் ஒரு நாளைக்கு ரூபாய் 10 ஆயிரமும், அவரது மனைவி முல்லை ஒரு நாளைக்கு ரூபாய் 8 ஆயிரமும், கடைசி தம்பி கண்ணன் ஒரு நாளைக்கு ரூபாய் 6 ஆயிரம் பேமெண்ட் வாங்குவதாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும்,பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குறிப்பாக அதிக சம்பளம் பெறுபவராக தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா அவர்கள் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குணச்சித்திர கதாபாத்திரத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவ்வாறு நடிப்பில் பல ஆண்டு அனுபவம் கொண்ட சுஜிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ‘தனம் அண்ணியாக’ வாழ்ந்து ஒரு நாளைக்கு ரூ. 17 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். இதனால் அதிக சம்பளம் பெறும் ஒருவராகவும் தனம் அண்ணி தான் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!