பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அதிக எபிசோடுகளை கடந்தும் வெற்றி பயணத்தில் செல்கிறது என்ற பெருமையை கொண்டுள்ளது. அப்பேற்பட்ட சீரியலில் நடிக்கும் நடிகர்களை விட தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனம் அண்ணியின் ஒரு நாள் சம்பளம்:

சீரியல் என்றாலே அடுத்தவர் குடும்பத்தை கெடுக்க நினைக்கும் வில்லிகள், பரம எதிரிகளை அழிக்க துடிக்கும் வில்லன்கள், மாமியார் மருமகள் சண்டை என அறுத்ததையே அறுக்காமல் புதிதாக அண்ணன் தம்பிகளின் பாசம், அம்மா போன்ற அண்ணியின் அளவு கடந்த அன்பு, மருமகள்களின் ஒற்றுமை, குடும்பத்தை கெடுக்க குடும்பத்தில் உள்ளவர்களே வில்லியாக வலம் வரும் உண்மை நிகழ்வுகளை மிகவும் அழகாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்தியாவில் மொத்தம் 8 மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தமிழக ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற ஒன்றாக வலம் வருகிறது.

முதன்முறையாக தனது மகனுடன் “பாரதி கண்ணம்மா” வெண்பா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

இத்தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கான தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு வழங்கும் ஒரு நாள் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, அண்ணன் ஒரு நாளைக்கு ரூபாய் 12 ஆயிரமும், தம்பி ஜீவா ஒரு நாளைக்கு ரூபாய் 10 ஆயிரமும், அவரது மனைவி மீனா ஒரு நாளைக்கு ரூபாய் 8 ஆயிரமும், இரண்டாவது தம்பி கதிர் ஒரு நாளைக்கு ரூபாய் 10 ஆயிரமும், அவரது மனைவி முல்லை ஒரு நாளைக்கு ரூபாய் 8 ஆயிரமும், கடைசி தம்பி கண்ணன் ஒரு நாளைக்கு ரூபாய் 6 ஆயிரம் பேமெண்ட் வாங்குவதாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

எழிலுக்காக ராதிகாவை விட்டு விலகும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

மேலும்,பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குறிப்பாக அதிக சம்பளம் பெறுபவராக தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா அவர்கள் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குணச்சித்திர கதாபாத்திரத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ‘தனம் அண்ணியாக’ வாழ்ந்து வரும் இவர் இந்த சீரியலில் நடிக்கும் மற்ற நடிகர்களை விட அதிக அனுபவம் கொண்டவர். இவர் ஒரு நாளைக்கு ரூ. 17 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். இதனால் அதிக சம்பளம் பெறும் ஒருவராகவும் தனம் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!