முதன்முறையாக தனது மகனுடன் “பாரதி கண்ணம்மா” வெண்பா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

0
முதன்முறையாக தனது மகனுடன்
முதன்முறையாக தனது மகனுடன் "பாரதி கண்ணம்மா" வெண்பா வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!
முதன்முறையாக தனது மகனுடன் “பாரதி கண்ணம்மா” வெண்பா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் நடிகை பரீனா. அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ள நிலையில், தனது பையனுடன் அவர் வெளியிட்ட அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக கலக்கி வருபவர் நடிகை பரீனா. அவர் பாரதி கண்ணம்மாவை பிரிக்க செய்த காரணம் எல்லாம் சின்னத்திரையில் இதுவரை இல்லாத அளவிற்கு கொடூரமாக இருக்கிறது. அதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வெண்பா கதாபாத்திரத்திற்கு ஒரு பக்கம் ரசிகர்களும் இருக்கின்றனர். பரீனா ஒரு தொகுப்பாளராக அறிமுகமாகி நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.

தனக்கே தெரியாமல் கர்ப்பமான முல்லை, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!

பரீனா சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்னர் வரை அவர் பட பிடிப்புகளில் கலந்து கொண்டார். அதனால் ஏகப்பட்ட பெண்களுக்கு அவர் முன்னுதாரணமாக இருக்கிறார். மேலும் குழந்தை பிறந்து ஒரே மாதத்தில் அவர் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது அவருடைய குடும்பத்தையும் தொழிலையும் அவர் பார்த்து வருகிறார். இந்நிலையில் கர்ப்பகாலத்தில் பல போட்டோஷூட்களை நடத்திய அவர் தன்னுடைய மகன் போட்டோவை அதிகமாக பகிர்வதில்லை.

ரசிகர்கள் பலர் அவரது மகன் போட்டோவை பகிர வேண்டும் என கமெண்ட் செய்து வந்த நிலையில் தற்போது அவர் தன்னுடன் மகனை கொஞ்சி அது குறித்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் லைக் செய்து இருக்கின்றனர். மேலும் பரீனா போலவே அவருடைய மகன் செம அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. பாரதி கண்ணம்மாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் பரீனாவிற்கு தனிப்பட்ட ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here