LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கான மானியத்தொகை வரவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!

0
LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கான மானியத்தொகை வரவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!
LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கான மானியத்தொகை வரவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!
LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கான மானியத்தொகை வரவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!

இந்தியாவில் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு சார்பாக மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை சிலருக்கு வரவு வைக்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது.

மானியத்தொகை:

இந்தியாவில் நாம் மாதந்தோறும் பயன்படுத்தும் சிலிண்டருக்கு அரசு சார்பாக குறிப்பிட்டத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. நாம் முழு விலை கொடுத்து சிலிண்டரை வாங்க வேண்டும். பிறகு அரசு குறிப்பிட்ட தொகையை மானியமாக வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விடும். இதற்காக அரசு அனைத்து சிலிண்டர் பயனர்களையும் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. காலப்போக்கில் இந்த மானியத்தொகை படிப்படியாக குறைக்கப்பட்டது. மேலும் சிலர் மானியத்தொகை வருவதே இல்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றனர். தற்போது சிலிண்டர் விலை கட்டுப்பாடின்றி உயர்ந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் முழு விலை கொடுத்து சிலிண்டர் வாங்குவது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். இல்லையெனில் மானியத்தொகை உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இந்த சிலிண்டர் மானியத்தொகை வாடிக்கையாளர்களுக்கு வருகிறதா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் இதனை தெரிந்து கொள்வது மிகவும் எளிது. அதாவது அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தை தேர்தெடுத்து அறியலாம்.

Airtel, Jio & VI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ. 500க்கான ரீசார்ஜ் திட்டங்கள்!

  • முதலில் வாடிக்கையாளர்கள் Mylpg.in என்ற இணையப்பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
  • முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று சிலிண்டர் நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும்.
  • அதில் உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து ’Give your feedback online’என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்து வரும் பக்கத்தில் மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், சிலிண்டர் பெறும் நிறுவனம் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • அதன் பிறகு, ‘Feedback Type’ என்பதைக் கிளிக் செய்து பின்னர் ’Complaint’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next’ கொடுக்கவும்.
  • அதில் மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா, இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!