Airtel, Jio & VI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ. 500க்கான ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Airtel, Jio & VI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரூ. 500க்கான ரீசார்ஜ் திட்டங்கள்!
Airtel, Jio & VI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரூ. 500க்கான ரீசார்ஜ் திட்டங்கள்!
Airtel, Jio & VI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ. 500க்கான ரீசார்ஜ் திட்டங்கள்!

தற்போது 500 ரூபாய்க்கு கீழே இருக்கும் ரீசார்ஜ் திட்டங்களை தேடும் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளுடன் சிறப்பான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

ரீசார்ஜ் திட்டங்கள்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை பல்வேறு வகையான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில் ரூ.500க்கு கீழ் உள்ள சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை தேடும் வாடிக்கையாளர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் பல சேவைகளுக்கான இலவச அணுகல் போன்ற OTT நன்மைகளை பெற முடியும். அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.239 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.

Exams Daily Mobile App Download

இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. அதே போல ரூ.259 ஜியோ ரீசார்ஜ் திட்டம் ஒரு மாதத்திற்கு 1.5ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் கொண்டுள்ளது. மேலும் ரூ.299 ஜியோ ரீசார்ஜ் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் வருகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். தொடர்ந்து ரூ.419 ப்ரீபெய்ட் ஜியோ திட்டமானது தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.

அடுத்தபடியாக ரூ.209க்கான ஏர்டெல் ரீசார்ஜ் பேக் தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் அனுப்பப்படுகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 21 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் பெறுகிறார்கள். தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ரூ.265 ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் தவிர, ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்துடன் கொடுக்கிறது. மேலும் ரூ.299 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ரூ.100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் மற்றும் பல சலுகைகள் கிடைக்கிறது.

PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதிப்பணத்தை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தவிர ரூ.359 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 28 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஃபாஸ்டேக் கேஷ்பேக், 3 மாத இலவச அப்பல்லோ சேவைகளை 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வழங்குகிறது. இறுதியாக வோடஃபோன் வழங்கும் ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் 18 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் கொடுக்கப்படுகிறது. அதே போல ரூ.209க்கான வோடபோன் ஐடியா (Vi) ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.

தொடர்ந்து ரூ.249 வோடபோன் ரீசார்ஜ் திட்டமானது ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை 21 நாட்களுக்கு வழங்குகிறது. அதே போல ரூ.239 வோடபோன் ரீசார்ஜ் பேக்கில் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை 21 நாட்களுக்கு வழங்குகிறது. அடுத்தபடியாக ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், 31 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை கொடுக்கப்படுகிறது. இப்போது இந்த திட்டத்தில் நள்ளிரவுக்கான இலவச டேட்டா நன்மை சலுகை (12AM-6AM) கிடைக்கிறது.

மேலும், ரூ. 409 வோடபோன் ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 3.5 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் நள்ளிரவு 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வரம்பற்ற டேட்டா ஆகியவை 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் கொடுக்கப்படுகிறது. கடைசியாக ரூ.499 வோடபோன் ரீசார்ஜ் திட்டமானது தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இத்திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவிற்கு 1 வருட இலவச அணுகல் மற்றும் நள்ளிரவு 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இலவச வரம்பற்ற டேட்டா 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!