NIT வேலைவாய்ப்பு 2022 – ரூ.31,000/- சம்பளம் || தேர்வு கிடையாது!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புதுச்சேரி (NIT Puducherry) ஆனது ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-ஏப்-2022 அல்லது அதற்கு முன் இப்பணிக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புதுச்சேரி |
பணியின் பெயர் | ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ காலிப்பணியிடங்கள்:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புதுச்சேரியில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
TN Job “FB
Group” Join Now
NIT புதுச்சேரி கல்வி தகுதி:
என்ஐடி புதுச்சேரியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech, ME/ M.Tech முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
சம்பளம் விவரங்கள்:
ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ – ரூ.31,000/-
தகுதிகள்:
PCB வடிவமைப்பில் அனுபவம் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மென்பொருள் மற்றும் வன்பொருளில் கட்டுப்பாட்டு வழிமுறைகளை செயல்படுத்துவதற்கான நல்ல நிரலாக்க திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் EEE NIT புதுச்சேரி திருவேட்டக்குடி காரைக்கால் 609 609 இன் உதவிப் பேராசிரியர் துறைக்கு 30-ஏப்-2022 அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.