Consultant பணிக்கு ரூ.90,000/- ஊதியம் – நேர்காணல் மட்டுமே..!

0
Consultant பணிக்கு ரூ.90,000/- ஊதியம் - நேர்காணல் மட்டுமே..!
Consultant பணிக்கு ரூ.90,000/- ஊதியம் - நேர்காணல் மட்டுமே..!
Consultant பணிக்கு ரூ.90,000/- ஊதியம் – நேர்காணல் மட்டுமே..!

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIOT) காலியாக உள்ள பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் காலியாக உள்ள Consultant பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (30.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Ocean Technology (NIOT)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

Consultant பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIOT) காலியாக உள்ளது.

Consultant கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Life Science பாடப்பிரிவில் Ph.D Degree தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Consultant அனுபவம்:

  • Consultant (Technical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தன்னாட்சி அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் Scientist பதவியில் Level-13 (VII CPC) ஊதிய அளவின் கீழ் 10 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Consultant (Administrative Fields, F&A) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தன்னாட்சி அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் Accounts Officer, Finance Officer, Audit Officer பதவிகளில் Level-10 ஊதிய அளவின் படி அல்லது Secretary பதவியில் Level-11 ஊதிய அளவின் படி அல்லது Deputy Secretary பதவியில் Level-12 ஊதிய அளவின் படி பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Consultant வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 64 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். எனவே 64 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

NIOT சம்பளம்:

  • Consultant (Technical) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ரூ.90,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • Consultant (Administrative Fields, F&A) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ரூ.65,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்NIOT தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

NIOT விண்ணப்பிக்கும் விதம்:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (30.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,
National Institute of Ocean Technology,
NIOT Campus,
Velachery–Tambaram Main Road,
Pallikaranai, Chennai-600 100.

NIOT Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!