மத்திய அரசின் சம்பளம், PF, ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு – புதிய ஊதியக் குறியீடு!

0
மத்திய அரசின் சம்பளம், PF, ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு - புதிய ஊதியக் குறியீடு!
மத்திய அரசின் சம்பளம், PF, ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு - புதிய ஊதியக் குறியீடு!
மத்திய அரசின் சம்பளம், PF, ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு – புதிய ஊதியக் குறியீடு!

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஊதியக் குறியீடு இந்த நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் நிலையில் ஊழியர்களின் விடுமுறை நாட்கள், சம்பளம் மற்றும் வேலை நேர மாற்றங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஊதியக் குறியீடு

இந்தியாவில் இதுவரை பயன்பாட்டில் இருந்து வந்த ஊதியக்கொள்கையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் படி மத்திய அரசு அறிவித்துள்ள புதிய மசோதாவின் கீழ் அலுவலக வேலைமுறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசின் இந்த புதிய ஊதியக் குறியீடு நடப்பு நிதியாண்டில் அமலுக்கு வரும் என அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இப்போது புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்டால், ஊழியர்களின் விடுமுறை நாட்கள், சம்பளம் மற்றும் வேலை நேரம் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகும்.

இந்தியாவில் LPG கேஸ் சிலிண்டருக்கான மானியம் ரத்து? பொதுமக்கள் அதிர்ச்சி!

இது தொடர்பாக EPFO வாரிய உறுப்பினரும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாயின் கூற்றுப்படி, புதிய தொழிலாளர் சட்டங்களில் ஊழியர்களின் வேலை நேரம், வருடாந்திர விடுமுறை, ஓய்வூதியம், PF, வீட்டுக்குச் செல்லும் சம்பளம், ஓய்வூதியம் போன்ற முக்கியமான விஷயங்களில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. புதிய விதிகளை அமல்படுத்துவதற்கு மாநிலங்களின் ஒப்புதலும் அவசியம் என்பதால் அதை அமல்படுத்துவதில் தாமதம் நிலவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் வாரிசுக்கு அரசு வேலை – சுகாதாரத்துறை அறிவிப்பு!

இருப்பினும், புதிய ஊதியக் குறியீடு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன், அதற்கான வரைவு வரி மற்றும் அறிவிப்பு வெளியிடப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது தொழிலாளர் அமைச்சகத்தின் தொழிலாளர் சீர்திருத்தப் பிரிவு அதிகாரி ஒருவர், PF மற்றும் வருடாந்திர விடுமுறைகள் குறித்து தொழிலாளர் சங்கம் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்திருப்பதாக கூறியுள்ளார். அந்த வகையில் ஊழியர்களின் விடுமுறையின் வரம்பு 240 நாட்களிலிருந்து 300 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் நிபந்தனை வைத்துள்ளது.

அதே நேரத்தில் கட்டிடம் மற்றும் கட்டுமானத் துறை, பீடி தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா துறையுடன் தொடர்புடைய நபர்களுக்கு தனி விதிகள் உருவாக்கப்படலாம். இது தொடர்பாக வீர்ஜேஷ் உபாத்யாயின் கூற்றுப்படி, வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் (EPF) தகுதியை ஊழியர்களின் மாநில காப்பீட்டுத் திட்டத்தைப் போல ரூ.15,000 லிருந்து ரூ.25,000 ஆக அல்லது குறைந்தபட்சம் ரூ.21,000 ஆகவும் அதிகரிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் புதிய சட்டங்கள் குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

புதிய ஊதியக் குறியீடு ஒரு விளக்கம்:

புதிய ஊதியக் குறியீடு என்பது 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 புதிய குறியீடுகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தொழில்துறை உறவுக் குறியீடு, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு (OSH), சமூக பாதுகாப்பு குறியீடு மற்றும் ஊதியக் குறியீடு ஆகியவை இதில் அடங்கும். தொழிலாளர் குறியீடுகளில் மிகப்பெரிய மாற்றம் ‘கூலி’ வரையறையின் விரிவாக்கம் ஆகும்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 311 பேர் பலி – 23,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

புதிய தொழிலாளர் குறியீடு மூலம் ஊழியர்களின் சம்பளத்தில் 50%, நேரடியாக ஊதியத்தில் சேர்க்கப்படும். ஊதிய குறியீடு சட்டத்தின்படி, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம், அந்த நிறுவனத்தின் (CTC) செலவில் 50% க்கும் குறைவாக இருக்கக்கூடாது. தற்போது, பல நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்து கூடுதல் கொடுப்பனவுகளை கூடுதலாக வழங்குவதன் மூலம் நிறுவனத்தின் சுமையை குறைத்து வருகிறது.

சம்பளம் மற்றும் சிறந்த ஓய்வூதிய பலன்கள்:

நிபுணர்களின் கூற்றுப்படி, அடிப்படை ஊதிய உயர்வு காரணமாக ஊழியர்களின் PF அதிகமாக கழிக்கப்படும் பட்சத்தில், அவர்களது வீட்டுச் சம்பளம் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்களின் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் மாதாந்திர கொடுப்பனவுக்கான அவர்களின் பங்களிப்பு உயரும் என்பதால் இந்த புதிய விதிகள் அவர்களின் ஓய்வூதியத்தில் அதிக நன்மைகளை அளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!