IPL 2021: வெற்றியை தொடருமா தோனியின் படை? இன்று SRH vs CSK பலப்பரீட்சை!

0
IPL 2021 வெற்றியை தொடருமா தோனியின் படை இன்று SRH vs CSK பலப்பரீட்சை!
IPL 2021 வெற்றியை தொடருமா தோனியின் படை இன்று SRH vs CSK பலப்பரீட்சை!

IPL 2021: வெற்றியை தொடருமா தோனியின் படை? இன்று SRH vs CSK பலப்பரீட்சை!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சையில் இறங்க உள்ளன. அதற்கான பிட்ச் ரிப்போர்ட், வெற்றி வாய்ப்பு மற்றும் உத்தேச அணி விவரம் குறித்த தகவல்களை இங்கே அறியலாம்.

SRH vs CSK இன்று மோதல்:

ஐபிஎல்லில் இன்று நடக்க உள்ள 44வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் கம்பீரமாக உள்ளது. சென்னை அணியை பொறுத்தவரை அனைத்து செயல்பாடுகளிலும் சிறப்பாகவே உள்ளது. கொல்கத்தாவிற்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 172 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டி பிடித்தது. பந்து வீச்சில் சஹார், தாக்குர், ஜடேஜா, ஹேசில்வுட் போன்றோர் விக்கெட் வீழ்த்துகின்றனர்.

IPL 2021: போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்! T20 உலக கோப்பை தொடர் எதிரொலி!

கடைக்குட்டி சாம் கர்ரன் ரன்களை வழங்காமல் இருந்தால் நல்லது. கடந்த ஆட்டத்தில் ஆடாத பிராவோ இன்றைய போட்டியில் அணிக்கு திரும்பினால் கூடுதல் பலம் பெற்றதாக சென்னை அணி திகழும். அதேபோல் ஐதராபாத் அணி தொடர்ந்து தடுமாற்றத்தை வெளிப்படுத்தி வந்தது. இதனால் புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் கடந்த போட்டியில் வலுவான டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதால் நம்பிக்கையுடன் களம் காண முயற்சிக்கும். தமிழக வீரர் யார்க்கர் நடராஜன் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்துதலில் இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகவே உள்ளது.

ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ள சென்னை அணி மேலும் வெற்றிகளை குவித்து தனது முதல் இடத்தை தக்க வைக்க முனைப்பு காட்டும். அதே நேரத்தில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஐதராபாத் அணி பட்டியலில் ஏற்றம் காண முயற்சிக்கும். இதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

IPL 2021 – RR vs RCB: பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!

பிட்ச் ரிப்போர்ட்:

இன்றைய போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சற்று சவால் அளிக்க கூடியதாக விளங்குகிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவ்விரு அணிகள் இதுவரை 16 முறை மோதியுள்ளது. அதில் சென்னை அணி 12 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. ஐதராபாத் அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளது.

உத்தேச 11 அணி விவரம்:
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (WK), கேன் வில்லியம்சன் (C), பிரியம் கர்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், புவனேஷ்வர் குமார், ரஷித் கான், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம் எஸ் தோனி (C & WK), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், சாம் கர்ரன்/டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!