TCS நிறுவன ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகள் – சம்பள உயர்வு அறிவிப்பு!

0
TCS நிறுவன ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகள் - சம்பள உயர்வு அறிவிப்பு!
TCS நிறுவன ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகள் - சம்பள உயர்வு அறிவிப்பு!
TCS நிறுவன ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகள் – சம்பள உயர்வு அறிவிப்பு!

டிசிஎஸ் ஊழியர்களுக்கு விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு வெளியாக உள்ளது. அதாவது ஊழியர்களுக்கு 8% வரை சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பள உயர்வு குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சம்பள உயர்வு:

கொரோனா வருகைக்கு பின், “வொர்க் ஃப்ரம் ஹோம்” என்ற சொல் மிகவும் பிரபலமான சொல்லாக மாறிவிட்டது. அதாவது உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த போது, பல ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் முறை அமல்படுத்தப்பட்டது .மேலும் தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி ஒரு சில அரசு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் என்ற வீட்டில் இருந்து வேலை முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் 2 ஆண்டுகளாக வொர்க் ப்ரம் ஹோம் என்ற வசதியை அனுபவித்த ஊழியர்கள் நிரந்தரமாக அதனை பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதாக தகவல்கள் கூறுகிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுநோய் நிலைமை ஓரளவு குறைந்துள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கின்றன. அந்த வகையில் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டிசிஎஸ்) தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு படிப்படியாக அழைக்கத் தொடங்கியது. இருப்பினும், நாட்டில் கோவிட் நிலைமை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நான்காவது அலை பயத்தால் பலர் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில் ஆக.9 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இதை தொடர்ந்து குரங்கம்மை நோயும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலர் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஹைபிரிட் மாடலுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்வது (வீடு மற்றும் அலுவலக வேலைகளின் கலவையானது) தான் ஹைப்ரிட் அணுகுமுறை என்று அழைக்கப்படுகிறது. மேலும் டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தற்போது இந்த அணுகுமுறையை நம்பியுள்ளன.

இந்த அணுகு முறையின் கீழ் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவதில்லை. அதாவது மேலாளர் பதவியில் பணிபுரியும் மூத்த நிலை ஊழியர்களை மட்டும் டிசிஎஸ் அலுவலகத்திற்கு அழைக்கிறது. அதுவும் முழு நேரமும் அல்ல. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே. மீதமுள்ள நாட்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஊழியர்களுக்கும் இனி சம்பள உயர்வு வழங்கப்படும் என TCS நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் டிசிஎஸ் ஊழியர்களுக்கு 6-8% சம்பள உயர்வு வழங்கப்படும் என டிசிஎஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!