தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டம் – முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டம் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டம் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டம் – முழு விவரம் இதோ!

தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியீட்டு உள்ளார். இது குறித்த முழு விபரத்தையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.

பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைத்து வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் குரூப் 2 தேர்வுகளுக்கான நாட்களை அறிவித்து இருந்தது. மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டு முழுமூச்சில் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் உள்ள படித்த பட்டதாரிகள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த TNPSC Group 2 தேர்வு அறிவிப்பு சென்ற மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்தாக, ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது.

TNUSRB உதவி ஆய்வாளர் (SI) பணிக்கு 444 காலிப்பணியிடங்கள் – எழுத்துத் தேர்வு அறிவிப்பு வெளியீடு!

இந்த நிலையில் பொதுமக்களுக்கு சென்னை மாவட்ட மாநகராட்சி ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது என்னவென்றால், தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது, நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களிலும், மற்ற மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒன்று என 7 நகராட்சிகள், 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சி வீதம் 37 பேரூராட்சிகளிலும் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

இது தவிர இன்னும் சில வற்றை கூறியுள்ளார். அதனையும் இந்த தொகுப்பில் பார்ப்போம். இத்திட்டத்தின் கீழ் இதுவரை தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3032 மனித சக்தி வேலை நாட்கள், திரு.வி.கநகர் மண்டலத்தில் 3135 மனித சக்தி வேலை நாட்கள் என மொத்தம் 6,167 மனித சக்தி வேலை நாட்களைப் பயன்படுத்தி 5,098 கன மீட்டர் அளவிற்கான வண்டல்கள் தூர்வாரி அகற்றப்பட்டுள்ளன. மேலும், தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆதார் அட்டையுடன் மண்டல அலுவலரை அணுகி தங்கள் வேலைவாய்ப்பிற்கான அடையாள அட்டையை பெற்று பயனடையுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!