‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஏற்படப்போகும் புதிய மாற்றம்? தனமாக அறிமுகமாகும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் ஏற்படப்போகும் புதிய மாற்றம்? தனமாக அறிமுகமாகும் பாக்கியலட்சுமி சுசித்ரா!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் ஏற்படப்போகும் புதிய மாற்றம்? தனமாக அறிமுகமாகும் பாக்கியலட்சுமி சுசித்ரா!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஏற்படப்போகும் புதிய மாற்றம்? தனமாக அறிமுகமாகும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதாவுக்கு பதிலாக ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை சுசித்ரா ஷெட்டி அறிமுகமாவதை போல் சமூக வலைதளங்களில் வெளியான ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் மக்களின் மனம் கவர்ந்து சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய சீரியல்கள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கக் கூடிய இந்த 2 சீரியல்களுக்கும் ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இந்த 2 தொடர்களுக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை என்னவென்றால் இவை இரண்டும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தவிர இதில் வரும் சில கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ஏறக்குறை ஒரே மாதிரியாக காணப்படும்.

கோபியின் விவாகரத்து திட்டத்தை கண்டுபிடித்த எழில், மாட்டிக் கொண்ட கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இதில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை எடுத்துக்கொண்டால் 4 அண்ணன், தம்பிகள் அவர்களின் மனைவிகள் என எல்லாரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இதில் மூத்த அண்ணனின் மனைவி தனம் கதாப்பாத்திரம் மொத்த குடும்பத்தையும் அழகாக வழிநடத்தி செல்லும் வகையில் காட்டப்படுகிறது. அதே நேரத்தில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலை பொருத்தளவு தன்னை வெறுக்கும் குடும்பத்திற்காகவும், கணவன், பிள்ளைகள் என்ற உறவுகளுக்காக எதையும் செய்ய நினைக்கும் அம்மாவாக வரும் பாக்கியா கதாப்பாத்திரம் தான் இந்த சீரியலின் பலமாகும். இதனால் தனம் மற்றும் பாக்கியா இருவருக்கும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இப்படிப்பட்ட கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வரும் இந்த 2 சீரியல்களிளும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் மாற்றம் ஏற்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதாவுக்கு பதிலாக, ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியாவாக வரும் நடிகை சுசித்ரா ரெட்டி புதிதாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!