தங்க நகைகள் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்!

0
தங்க நகைகள் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்!
தங்க நகைகள் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்!
தங்க நகைகள் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்!

இந்தியாவில் ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளது. தங்க நகைகள் வாங்க திட்டமிடுவோர் இந்த புதிய விதிகளை தெரிந்து வைத்து கொள்வது நல்லது. என்னென்ன விதிகள் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

தங்க நகைகள்:

இந்தியாவில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட தொழில் சரிவால் மக்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கால் அனைத்து வியாபாரமும் முடங்கியதாலும் தங்கம் விலை அதிகரித்தது. இதனால் சாமானிய மக்கள் நகை வாங்குவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர். அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் முதல் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.

TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2022 இறுதி வரை Work From Home நீட்டிப்பு!

இந்த நிலையில் நடைபெற்ற ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரின் தாக்கத்தால் ஏற்பட்ட பங்கு சந்தை சரிவால் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. இதனால் தற்போது ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 40,000 ஐ எட்டியுள்ளது. இதனால் திருமணத்திற்கு நகைகள் வாங்க திட்டமிடுவோர் மற்றும் நகைப்பிரியர்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு தங்க நகைக்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அனைத்து நகைகளும் கட்டாயம் ஹால்மார்க் முத்திரையுடன் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

நீங்கள் வாங்கும் தங்கம் தூய தங்கம் என்பதற்கும் அதிகாரப்பூர்வமான இடத்தில்தான் நகை வாங்குகிறீர்கள் என்பதற்கும் ஹால்மார்க் முத்திரை சிறந்த சான்றாக உள்ளது. அதனால் ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயமாக்கப்படுகிறது. பொதுமக்கள் நகைகள் வாங்கும் பொது இந்த முத்திரை உள்ளதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டியது அவசியம். மேலும் நீங்கள் நகை வியாபாரிகளிடம் இருந்து ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை வாங்கினால் அதற்குச் சான்றாக ரசீது வாங்க வேண்டியது அவசியம். இந்த ரசீதில் பொருளின் விவரம், எடை, காரட், தூய்மை மற்றும் ஹால்மார்க் கட்டணம் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!