1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மே 16 முதல் புதிய கல்வியாண்டு துவக்கம்!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மே 16 முதல் புதிய கல்வியாண்டு துவக்கம்!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மே 16 முதல் புதிய கல்வியாண்டு துவக்கம்!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மே 16 முதல் புதிய கல்வியாண்டு துவக்கம்!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் மே 16 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 2022-23ம் ஆண்டுக்கான கல்வி நாட்காட்டியும் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கல்வியாண்டு

இன்னும் ஒரு சில நாட்களில் 2021-22ம் கல்வியாண்டு முடிவடைய இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை முடிந்தவுடன் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் மே 16 முதல் மீண்டும் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட 2022-23 கல்வி நாட்காட்டியின்படி, அடுத்த கல்வி அமர்வு 16 மே 2022 முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – WhatsApp வாயிலாக புக்கிங் செய்வது எப்படி?

இதனுடன் கர்நாடகா கல்வித் துறையானது, முழு அளவிலான செயல்பாடுகள் மற்றும் வகுப்புகளுடன் கூடிய கல்வி நாட்காட்டியை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்ட பிறகு, இப்போது வழக்கம் போல 250 நாட்களுக்கு மேல் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் ஆனால் அவசியமான விடுமுறைகளை இலக்காகக் கொண்டு, பள்ளிகளுக்கான அடுத்த விடுமுறைகள் அக்டோபர் மாதத்தில் இருக்கும் என்று மாநில கல்வித்துறை கூறியுள்ளது.

ExamsDaily Mobile App Download

இப்போது கர்நாடகா பள்ளி மாணவர்கள் 2022-23 கல்வி நாட்காட்டியின் நகலை அந்தந்த பள்ளிகளிலிருந்து எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, இந்த முறை ஜூன் மாதத்தில் எந்தவொரு விடுமுறையும் இருக்காது என்றும் கொரோனா காரணமாக விடுபட்ட அனைத்து வகுப்புகளையும் ஈடுசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய கல்வியாண்டுக்கான தசரா விடுமுறைகள் அக்டோபர் 3 முதல் 16 வரை இருக்கும் என்றும் ஆண்டுத் தேர்வுகள் மார்ச் 23 முதல் 31 வரை இருக்கும் என்றும் கல்வி நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!