கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – WhatsApp வாயிலாக புக்கிங் செய்வது எப்படி?

0
கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் - WhatsApp வாயிலாக புக்கிங் செய்வது எப்படி?
கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் - WhatsApp வாயிலாக புக்கிங் செய்வது எப்படி?
கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – WhatsApp வாயிலாக புக்கிங் செய்வது எப்படி?

வாட்ஸ் ஆப் மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து இனி எளிதாக சிலிண்டர் புக்கிங் செய்யலாம்.

சிலிண்டர் புக்கிங்:

இந்தியாவில் கடந்த ஊரடங்கு காலத்தில் இருந்து அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப கேஸ் சிலிண்டர் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1000 ரூபாயை கடந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் மாதந்தோறும் சிலிண்டர் வாங்குவதில் பல்வேறு சிக்கலை எதிர்கொள்கின்றனர். இருப்பினும் அரசு தரப்பிலிருந்தும் இலவச சமையல் சிலிண்டர் இணைப்பும் அதற்கான மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

TCS, HCL Tech & Zomato நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – மீண்டும் வீட்டிலிருந்து தொடரும் வேலை முறை?

ஏழை எளிய மக்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கும் நோக்கில் மத்திய அரசால் 2.0 என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தி அடைந்த பெண்கள் இத்திட்டத்தில் சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம். சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் மாதந்தோறும் ஆன்லைன் மூலமாகவும், SMS, மிஸ்டு கால் கொடுத்தும் சிலிண்டர் புக்கிங் செய்து வருகின்றனர்.

ExamsDaily Mobile App Download

இந்த நிலையில் வாட்ஸ் ஆப் மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்யும் புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது சிலிண்டர் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து புக்கிங் செய்யலாம். இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ், இண்டேன் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணுக்கு REFILL என்று டைப் செய்து அனுப்பி சிலிண்டர் புக்கிங் செய்யலாம். HP சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 9222201122 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு BOOK என்று டைப் செய்து பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் 1800224344 என்ற எண்ணுக்கு BOOK என்று டைப் செய்து அனுப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here