மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – GTக்கு எதிரான போட்டி கணிப்பு! உத்தேச 11 அணி!

0
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு - GTக்கு எதிரான போட்டி கணிப்பு! உத்தேச 11 அணி!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு - GTக்கு எதிரான போட்டி கணிப்பு! உத்தேச 11 அணி!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – GTக்கு எதிரான போட்டி கணிப்பு! உத்தேச 11 அணி!

IPL 2022 சீசனில் இன்று (மே 6) நடைபெற இருக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. இந்த போட்டிக்கான வெற்றிக் கணிப்பு, உத்தேச 11 அணி விவரங்களை இப்பதிவில் காணலாம்.

போட்டி கணிப்பு

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் இன்று நடைபெற இருக்கும் 51வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் மோதவிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி, 9 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மற்றும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் மும்பை அணியை இன்றைய ஆட்டத்தில் சந்திக்க இருக்கிறது. இதில் மும்பை அணியை பொறுத்தமட்டில் தொடர்ச்சியான 8 தோல்விகளுக்கு பிறகு அவர்கள் கடந்த ஆட்டத்தில் தான் ஒரு பார்முக்கு வந்திருக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் கடந்த ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த MI அணி இன்றும் முழு கவனத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மறுபக்கத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி தனது கடைசி ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான GT அணி 10 ஆட்டங்களில் 8ல் வெற்றி பெற்றதன் மூலம் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இப்போது ஒரே பார்மில் இருக்கும் இவ்விரு அணிகளும் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று மோதுகிறது.

வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்ற முல்லை, கரு இல்லை என சொன்ன டாக்டர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இந்த போட்டிக்கான வெற்றிக் கணிப்பு, உத்தேச 11 அணி விவரங்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.

  • போட்டி: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • நாள்: மே 6
  • இடம்: பிரபோர்ன் ஸ்டேடியம்
  • நேரம்: மாலை 7:30
  • நேரடி ஒளிபரப்பு:

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் பெற்றுள்ளது. அதனால் இந்த ஆட்டத்தை அனைத்து ஸ்டார் நெட்வொர்க்கிலும் காண முடியும். மேலும் இந்த போட்டியை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலி நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்கிறது.

  • Dream11 குழு கணிப்பு:
  • கேப்டன்: சூர்யகுமார் யாதவ்
  • துணை கேப்டன்: ஹர்திக் பாண்டியா
  • Dream11 பேண்டஸி கிரிக்கெட்டின் பிளேயிங் XI:
  • விக்கெட் கீப்பர்கள்: விருத்திமான் சாஹா, இஷான் கிஷன்
  • பேட்டர்ஸ்: சூர்யகுமார் யாதவ், டேவிட் மில்லர், திலக் வர்மா
  • ஆல்ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, டேனியல் சாம்ஸ், ராகுல் தெவாடியா
  • பந்துவீச்சாளர்கள்: லாக்கி பெர்குசன், முகமது ஷமி, ரஷித் கான்
  • உத்தேச XI அணிகள்:

குஜராத் டைட்டன்ஸ் : ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், பிரதீப் சங்வான், அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன், முகமது ஷமி

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித், குமார் கார்த்திகேயா.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!