முக்கியமான ஒப்பந்தங்கள் – மார்ச் 2019

0

முக்கியமான ஒப்பந்தங்கள் – மார்ச் 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2019

இங்கு மார்ச் மாதத்தின் முக்கியமான ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மார்ச் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

சர்வதேச ஒப்பந்தங்கள்:

ஒப்பந்தமிடும் நாடுகள் ஒப்பந்தத்தின் விவரங்கள் நாடுகளின் விவரங்கள்
இந்தியா மற்றும் அமெரிக்கா காணாமற் போன, மற்றும் சுரண்டளுக்கு ஆளான குழந்தைகள் பற்றிய தகவல் மற்றும் துப்பு அறிக்கையை அணுக இந்தியாவின் தேசிய குற்றப்பதிவு பணியகத்திற்கும், காணாமற் போன மற்றும் சுரண்டளுக்கு ஆளான குழந்தைகளின் தேசிய மையம், NCMEC, அமெரிக்காவிற்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜனாதிபதி – டொனால்ட் டிரம்ப்
துணை ஜனாதிபதி – மைக் பென்ஸ்
தலைநகரம் – வாஷிங்டன், டி.சி.
நாணயம் – அமெரிக்க டாலர்
இந்தியா மற்றும் உலக வங்கி உத்தராகண்ட் பேரிடர் மீட்பு திட்டத்தின் கூடுதல் நிதிக்காக 96 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உலக வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. ஜனாதிபதி – ஜிம் யோங் கிம்
தலைமையகம் – வாஷிங்டன், டி.சி., ஐக்கிய மாகாணங்கள்
தலைமை நிர்வாக அதிகாரி – கிறிஸ்டலினா ஜியார்ஜீவா
உறுப்பினர்கள் -189 நாடுகள் (IBRD); 173 நாடுகள் (IDA)
இந்தியா மற்றும் ADB அஸ்ஸாம் திப்ருகார் நகரில் வடிகால் வசதிகளை மேம்படுத்துவதற்காக 26 மில்லியன் டாலர் கூடுதல் நிதி வழங்கும் கடன் ஒப்பந்தத்தில் மத்திய மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB)   கையெழுத்திட்டுள்ளது. ஜனாதிபதி – தாகிகோ நாகோ
உருவாக்கம் -19 டிசம்பர் 1966
தலைமையகம் – மானிலா, பிலிப்பைன்ஸ்
உறுப்பினர்கள் -67 நாடு
இந்தியா மற்றும் நேபாளம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் 72 கல்வி நிலையங்களை புனரமைப்பதற்காக மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI) ரூர்கி நியமிக்கப்பட்டுள்ளது. இது தெடர்பாக ஒரு ஒப்பந்தம் இந்தியாவின் தூதரகத்திற்கும், CBRI க்கும் இடையில் காத்மாண்டுவில் கையெழுத்தானது. ஜனாதிபதி – பித்யா தேவி பண்டாரி
பிரதமர் – காட்கா பிரசாத் ஓலி
தலைநகரம் – காத்மாண்டு
நாணயம் – நேபாள ரூபாய்
இந்தியா மற்றும் பராகுவே இந்தியா மற்றும் பராகுவே இருதரப்பு முதலீட்டை ஊக்குவிப்பதற்காக பரஸ்பர ஒப்புதலுடன் துறைகளை அடையாளம் காண ஒப்புக்கொண்டதுடன், தகவல் தொடர்புத்துறை, தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் உயிரி தொழில்நுட்பம் உட்பட புதிய பிரிவுகளில் வளர்ச்சி பெற ஒப்புதல் ஜனாதிபதி – மரியோ அபோ பெனிடெஸ்
துணை ஜனாதிபதி – ஹ்யூகோ வெலாஸ்வேஸ்
தலைநகரம் – அசுன்சியோன்
நாணயம் – பராகுவேயன் குரானி
இந்தியா மற்றும் மாலைதீவு மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் புதிய விசா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும் வணிக வாய்ப்புகளைத் தேடும் மாலத்தீவர்களுக்கான தாராளவாத விசா கொள்கையை வழங்குகிறது. ஜனாதிபதி – இப்ராஹிம் மஹ்மத் சோலிஹ்
துணை ஜனாதிபதி – முகமது ஜமீல் அகமது
தலைநகரம் – மாலே
நாணயம் – மாலதீவின் ரூபியா
இத்தாலி மற்றும் சீனா பெய்ஜிங் நாட்டின் புதிய பட்டு (SILK) சாலை போக்குவரத்து மற்றும் வர்த்தக இணைப்புகள் ஆசியாவிலிருந்து ஐரோப்பா வரை நீட்டிக்க சீனாவுடன் ஒரு பிணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இத்திட்டத்திற்காக கையொப்பமிட முதல் G7 நாடு இத்தாலி ஆகும்.
அமெரிக்கா மற்றும் ஒமன் அமெரிக்க கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஓமன் துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் ஓமன் கையெழுத்திட்டுள்ளது. ஓமன் ஜனாதிபதி – கபூஸ் பின் அல் சைட்
ஓமன் துணை பிரதமர் – ஃபஹ்ட் பின் மஹ்மூத் அல் சீத்
ஓமன் தலைநகரம் – மஸ்கட்
ஓமான் நாணயம் – ரியால்
இந்தியா மற்றும் குரோஷியா இந்தியா மற்றும் குரோஷியா விளையாட்டு, சுற்றுலாத்துறை மற்றும் ஜாக்ரெப் பல்கலைக்கழகத்தில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத சபை நிறுவல் ஆகிய முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. ஜனாதிபதி – கொலிண்டா கிராபார்-கித்தாரோவிக்
துணை ஜனாதிபதி – ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்
தலைநகரம் – சாக்ரெப்
நாணயம் – குரோஷியன் குனா
இந்தியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் இந்தியா-ஆப்பிரிக்கா சுகாதார அறிவியல் கூட்டுறவுத் தளம் ஒன்றை நிறுவுவதற்கு இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கும் இடையில் உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜனாதிபதி – HE. பால் ககமே
தலைமையகம் – அடிஸ் அபாபா, எத்தியோப்பியா
உறுப்பினர்கள் – 54 நாடுகள்
இந்தியா மற்றும் பொலிவியா இந்தியா மற்றும் பொலிவியா கலாச்சாரம், விஞ்ஞானிகளுக்கான விசா தள்ளுபடி ஒப்பந்தம், இராஜதந்திர கல்வி நிலையங்கள், சுரங்கங்கள், விண்வெளி, பாரம்பரிய மருத்துவம், ஐடி மற்றும் பி-ஓசியானிக் ரயில்வே திட்டத்தின் சிறப்பு மையம் ஆகியவற்றிற்க்கான எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. ஜனாதிபதி – எவோ மோராலேஸ்
துணை ஜனாதிபதி – அல்வரோ கார்சியா லினெரா
தலைநகரம் – சுக்ரீ
நாணயம் – பொலிவியன் பொலிவியானோ

தேசிய ஒப்பந்தங்கள்:

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையை உலகளாவிய மருத்துவ பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

  • புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையை, உலகளாவிய மருத்துவ பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான மாஸ்டர் பிளானை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1299 கோடி ரூபாய் செலவில் ஹரியானாவில் உள்ள மானேதியில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லி-கஜியாபாத்-மீரட் பிராந்திய ரேபிட் ட்ரான்ஸிட் சிஸ்டம்-க்கு உத்தரபிரதேச அமைச்சரவை அங்கீகரிக்கிறது

  • உத்தரப்பிரதேச அமைச்சரவை டெல்லி-கஜியாபாத்-மீரட் பிராந்திய ரேபிட் ட்ரான்ஸிட் சிஸ்டம்-க்கு விரைவான மற்றும் மாசில்லாத இலவச போக்குவரத்து முறைமையை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் 2024 இல் நிறைவு செய்யப்படும்.

ஜமாத்  இஸ்லாமி J & K-வை 5 ஆண்டுகளுக்கு அரசு தடை செய்தது

  • ஜம்மு மற்றும் காஷ்மீறில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை விதித்துள்ளது. இது பயங்கரவாத அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், மாநிலத்தில் பிரிவினைவாத இயக்கத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு இந்த எடுக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் ரயில்வே மண்டலம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

  • ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரயில்வே மண்டலத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தெற்கு மத்திய இரயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை இரயில்வேயை மறுசீரமைத்து ஒடிசாவில் உள்ள ராயகடாவை தலைமையிடைமாக மாற்றவும் அங்கீகரிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கஅமைச்சரவை ஒப்புதல்

  • மத்திய அமைச்சரவை (ஜம்மு மற்றும் காஷ்மீர்) சட்டதிருத்தம் ஆணை, 2019 – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

NITTTRC போபால், ஸ்ரீ விஸ்வகர்மா திறமை பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம்

  • இளைஞர்களுக்கான திறமை மேம்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு போபாலில் உள்ள தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தேசிய நிறுவனம் (NITTTRC) மற்றும் ஸ்ரீ விஸ்வகர்மா திறமை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க அரசு திட்டம்

  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, CCEA நாடு முழுவதும் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆதாரின் தன்னார்வ பயன்பாட்டை அனுமதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்

  • மொபைல் சிம் கார்டுகளை பெற்றுக்கொள்வதற்காகவும், வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்காகவும் அடையாள அட்டையாக ஆதாரின் தன்னார்வ பயன்பாட்டை அனுமதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரு ஹைட்ரோ மின்சார திட்டத்திற்கான முதலீட்டிற்கு அமைச்சரவை அனுமதி

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 624 மெகா வாட் கிரு ஹைட்ரோ மின்சார திட்டத்திற்கான முதலீட்டிற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஒப்புதல் அளித்துள்ளது.

வோக்ஸ்வாகன் மீது NGT 500 கோடி ரூபாய் அபராதம் விதித்தது

  • தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்தியாவில் டீசல் கார்களை ஏமாற்றும் சாதனம் மூலம் சுற்றுச்சூழலை சேதப்படுத்தியதற்காக ஜெர்மன் கார் நிறுவனமான வோக்ஸ்வாகன் மீது 500 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க CCEA ஒப்புதல்

  • சர்க்கரை ஆலைகள் 2 ஆயிரத்து 790 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய NCLT பெஞ்சுகள்

  • ஆந்திராவின் அமராவதியிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோரிலும், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி.) இரண்டு புதிய பெஞ்ச் அமைக்க அரசு அங்கீகரித்துள்ளது.

WCD மற்றும் திறன் வளர்ச்சி அமைச்சகத்திற்கு இடையில் ஒப்பந்தம்

  • மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் திறன் வளர்ச்சி, தொழில்முயற்சிகள் அமைச்சகம் ஆகியவைக்கு இடையே பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கும் திறமை மேம்பாட்டிற்காக அவர்களை மேம்படுத்தும் நோக்கத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1320 மெகாவாட் குர்ஜா சூப்பர் தெர்மல் மின் ஆலைக்கு CCEA முதலீடுசெய்ய அங்கீகாரம் வழங்கியது

  • 1320 மெகாவாட் குர்ஜா சூப்பர் தெர்மல் மின் உற்பத்தி நிலையம் (STPP) உத்தரபிரதேச மாநிலத்தின் புலாந்த்ஷாஹரில் முதலீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, CCEA ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய வங்கி, ஏடிபி வங்கி 26 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம்

  • அசாம் திப்ருகார் நகரில் வடிகால் வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி வழங்குவதற்காக மத்திய வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 26 மில்லியன் டாலருக்கான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

390 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை அரசு 87 % வரை குறைத்துள்ளது

  • இரசாயன மற்றும் உரத் துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் 390 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை அரசு 87 % வரை குறைத்து அதன் பட்டியலை வெளியிட்டது. இந்த நடவடிக்கையினால் நாட்டில் 22 லட்சம் புற்று நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 800 கோடி ரூபாய் வருடாந்திர சேமிப்பையும் அளிக்கிறது.

மத்திய கல்வி நிறுவனங்களின் (ஆசிரியர்களின் பணியிடங்களின்ஒதுக்கீடு) அவசரச் சட்டம், 2019

  • மத்திய கல்வி நிறுவனங்களின் (ஆசிரியர்களின் பணியிடங்களின் ஒதுக்கீடு) அவசரச் சட்டம், 2019 ஆம் ஆண்டிற்கான முன்மொழிவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசரச் சட்டம் மூலம் அட்டவணையில் உள்ள மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்புகளின் இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும்.

2019ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கு அமைச்சரவைஒப்புதல்

  • மக்களவை சட்டத்தின் 14 வது பிரிவின் உட்பிரிவு (2) இன் கீழ் சட்டப்பூர்வ அறிவிப்புகளை வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அயோத்தி நில வழக்கிற்கு மூன்று உறுப்பினர்கள் கொண்ட மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது

  • அயோத்தி நில வழக்கிற்கு மூன்று உறுப்பினர்கள் கொண்ட மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) எப். எம். கலிபுல்லா இந்த மத்தியஸ்தர்களின் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். மத்தியஸ்தர்களின் குழு உறுப்பினர்களாக ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பாஞ்ச் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டிஜிசிஏ போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தை தரையிறக்க முடிவு

  • சிவில் விமான போக்குவரத்தின் பொது இயக்குனர் டி.ஜி.சி.ஏ., உடனடியாக போயிங் 737 மாக்ஸ் 8 விமானத்தை தரையிறக்க முடிவு செய்துள்ளது. அடிஸ் அபாபாவில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்து ஏற்பட்டு 157 பேர் இறந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சூரத் மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

  • மத்திய அரசு 12,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரத் மெட்ரோ திட்டத்தின் இரண்டு காரிடார் அமைக்க திட்டமிட்டு உள்ளது. முதல் காரிடார் – சர்தானா முதல் ட்ரீம் சிட்டி லைன் – 21.61 கி.மீ., இரண்டாவது காரிடார் – பிஷன் – சரோலி – 18.74 கி.மீ.
  • மத்திய அரசு மற்றும் மாநில அரசு 50-50 சதவீதம் சமபங்கு மூலம் இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்கும்.

ஐபிபிஐ மற்றும் செபி இடையே ஒப்பந்தம்

  • தொழில் முனைவோர் மற்றும் கடன் சந்தையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய திவால் மற்றும் வாராக்கடன் வாரியம் (ஐபிபிஐ) – இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.

EWSக்கான 10 சதவிகித ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசுநியாயப்படுத்துகிறது

  • பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) 10 சதவிகித ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நியாயப்படுத்துகிறது, இது சமூக சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக கொண்டு வந்துள்ளது எனத் தெரிவித்தது.

அரசு, மருந்துகள் மற்றும் மருத்துவ சோதனை விதிகள் 2019 யை அறிவித்தது

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், மருந்துகள் மற்றும் மருத்துவ சோதனை விதிகள் 2019 யை நாட்டில் மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக அறிவித்துள்ளது. புதிய விதிகள் நாட்டில் மருத்துவ பரிசோதனைகள், புதிய மருந்துகள் மற்றும் அதன் ஒப்புதலின் ஒழுங்குமுறையை மாற்றும்.

PDF Download

To Read in English: Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!