தமிழகத்தில் 3 முதல் 6ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஊக்கத்தொகை அறிவிப்பு!

0
தமிழகத்தில் 3 முதல் 6ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஊக்கத்தொகை அறிவிப்பு!
தமிழகத்தில் 3 முதல் 6ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஊக்கத்தொகை அறிவிப்பு!
தமிழகத்தில் 3 முதல் 6ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஊக்கத்தொகை அறிவிப்பு!

கிராமப் புறங்களில் படிக்கும் மாணவ மாணவிகளின் கற்றல் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவித் தொகை:

கிராமப் புறங்களில் படிக்கும் மாணவ மாணவிகள் படிப்பை தொடர போதிய வசதி இல்லாத காரணத்தினால் பாதியிலேயே படிப்பை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சிறு வயதிலேயே வேலைக்கு செல்கின்றனர். அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்க சிறும்பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – RBIயின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். அதாவது கிராமப்புறங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக அந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு ரூ.500 மற்றும் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகைக்காக மட்டுமே சுமார் 2.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு அடக்க ஸ்தலங்களை அமைக்கவும், புதிய நிலத்தை கையகப்படுத்தவும், சென்னையில் ஏற்கனவே உள்ள அடக்கஸ்தலங்களில் மீண்டும் உடல்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் மாநில அளவில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் கொண்டாட ஆண்டுக்கு 2.5 லட்சம் வழங்கப்படும் எனவும், அவர்களின் குடும்பத்தில் உள்ள ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது குடும்பம் வறுமையில் வாடாமல் இருப்பதற்காக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!