கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – RBIயின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - RBIயின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - RBIயின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – RBIயின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

இந்தியாவில் தற்போது வங்கிகளில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க தற்போது அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் RBI புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதனை அனைத்து வங்கிகளிலும் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய விதிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

புதிய வழிகாட்டுதல்கள்

இந்தியாவில் தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பணப்பரிவர்ததனைகளும் தற்போது டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட்டு வருகிறது. அதனால் பல்வேறு வகையில் மோசடிகள் நடைபெற்று வருகின்றனர். அத்துடன் மோசடிகளை நிகழ்த்த நாள்தோறும் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதனை தடுக்க தற்போது பல்வேறு வகையான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

HCL Tech நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு!

இந்த புதிய விதிமுறை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொடர்பானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்களின் கிரெடிட் கார்டுகளை வழங்குதல் அல்லது மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள கூடாது. அத்துடன் இதனை மீறி செயல்படும் வங்கிக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download

மேலும் ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட வங்கிகள் கிரெடிட் கார்டு பிசினஸ் மேற்கொள்ளலாம் என்று RBI அறிவித்துள்ளது. இதனை தானாகவோ அல்லது பிற கார்டு வழங்கும் வங்கிகள் அல்லது NBFC-க்களுடன் கூட்டாகவோ செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் தொலைந்த கார்டுகள், கார்டு மோசடிகள் உள்ளிட்டவைகளுக்கு தகுந்த நிவாரணத்தை அந்தந்த கார்டு வழங்குநர்கள் இது குறித்து பரிசீலினை மேற்கொள்ள வேண்டும். மேலும் கிரெடிட் கார்டுகளின் பாதுகாப்பு கருதி கார்டு வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யவில்லையெனில் அந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து OTP அடிப்படையிலான ஒப்புதல் பெற வேண்டும் என்று RBI அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here