
மத்திய அரசு நிறுவனத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை ரெடி – சம்பளம்: 2,15,900/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!
இந்திய கூட்டுறவு அமைச்சகத்தில் (Ministry of Cooperation) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Cooperative Ombudsman பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 21.09.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | கூட்டுறவு அமைச்சகம் (Ministry of Cooperation) |
பணியின் பெயர் | Cooperative Ombudsman |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கூட்டுறவு அமைச்சக காலிப்பணியிடங்கள்:
இந்திய கூட்டுறவு அமைச்சகத்தில் Cooperative Ombudsman பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Cooperative Ombudsman கல்வி தகுதி:
Cooperative Ombudsman பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கூட்டுறவு அமைச்சக அனுபவம்:
மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் District Judge அல்லது Director பதவிகளில் குறைந்தது 10 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.
Cooperative Ombudsman வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 70 வயதிற்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
கூட்டுறவு அமைச்சக சம்பளம்:
Cooperative Ombudsman பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Level – 13 என்ற ஊதிய அளவின் படி, ரூ.1,23,100/- முதல் ரூ.2,15,900/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
Cooperative Ombudsman தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
NHSRC நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.1,70,000/- சம்பளமாக பெற வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
கூட்டுறவு அமைச்சகம் விண்ணப்பிக்கும் விதம்:
இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 21.09.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.