தமிழகத்தில் ஆசிரியர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
தமிழகத்தில் ஆசிரியர்களின் அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீர்த்துவைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிபட தெரிவித்தார். மேலும் என்னை பார்ப்பதற்காக எந்த ஆசிரியர்களும் வந்து காத்துக் கொண்டிருக்க வேண்டாம். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் தமிழகத்தின் வருங்கால தலைமுறைகளை சிறந்தவர்களாக உருவாக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல சிறப்பான திட்டங்களை அமல் படுத்தி வருகிறார். மேலும் கொரோனா வருகையால் மாணவர்களிடையே ஏற்பட்ட கல்வி இடைவெளியை ஈடு செய்யும் விதம் “இல்லம் தேடி கல்வி திட்டம்”, இதை தொடர்ந்து எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளி என் பெருமை” என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி கோயம்புத்தூரில் கே.பி.ஆர் கல்லூரியில் கல்வியாளர்கள் சங்கமம் நடத்திய “ஆசிரியர்களுடன் அன்பில்” என்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
TN Job “FB
Group” Join Now
அப்போது பேசிய அமைச்சர், எனக்கும் ஆசிரியர்களுக்குமான தொடர்பு என்பது கல்வித்துறை அமைச்சராவதற்கு பின்னர் ஏற்பட்டதல்ல, எனது பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு ஆசிரியர்களுடனான தொடர்பும், மரியாதையும் இருந்து வருகிறது. மேலும் 4 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோதே, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்ட இதே கல்வியாளர் சங்கமம் நிகழ்ச்சியில், வரும் தேர்தலில் ‘‘காட்சி மாறும், காட்சியும் மாறும்” அப்போது எங்கள் துறைக்கு நீங்கள் அமைச்சராக வருவீர்கள்” என்று ஆசிரியரான சிகரம் சதீஷ் சொன்னார்.
இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கடன் உதவி – மத்திய அரசு அறிவிப்பு!
தொடர்ந்து பேசிய அவர் , ஆசிரியர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தொகுத்து பட்டியலிட்டுள்ளோம். அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக விரைவில் நிறைவேற்றப்படும்.மேலும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். மேலும் மாதத்திற்கு 2 மாவட்டங்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து உங்களைத் தேடித் தேடி உங்களது குறைகளைக் கேட்டு அவற்றை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என கூறினார். மேலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இந்த நம்பிக்கை பேச்சு, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்வை கொடுத்துள்ளது.