இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கடன் உதவி – மத்திய அரசு அறிவிப்பு!

0
இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கடன் உதவி - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கடன் உதவி - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கடன் உதவி – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிருக்கு கடன் உதவி வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது மேலும் இது குறித்து மத்திய இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா பாராளுமன்ற மாநிலங்களவையில் பதிலளித்துள்ளார்.

மத்திய அரசு:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டன. இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வறுமை, விலைவாசி உயர்வு போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் விளைவாக நாடு முழுவதும் வேலையின்மை அதிகரிக்க தொடங்கியது. மேலும் நாட்டில் பணவீக்கம் மற்றும் நடுத்தர தொழில் பின்னடைவு போன்ற காரணங்களால் மக்களிடையே வறுமை அதிகரிக்க தொடங்கியது.

TN Job “FB  Group” Join Now

தற்போது கொரோனா பரவல் குறைந்து மக்கள் மெதுவாக தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். நாட்டில் அனைத்து தொழில்களும் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன. அதற்கேற்றவாறு ஒன்றிய அரசு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் நலனை கருத்தில் கொண்டு தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அரசு பல்வேறு முன் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அவசர கடன் உதவிக்கு 5 லட்சம் கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வணிகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான கால அளவு 31.03.2023 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 10) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்தியாவில் இது வரை 2,50,319 பெண் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. கடன் உத்திரவாத திட்டம், கடன் வழங்கும் முறையை எளிதாக்குதல், பிணையத்தொகை மற்றும் இடைத்தரகர் உள்ளிட்ட பிரச்னைகளின்றி அதிகபட்சமாக ரூ.200 லட்சம் வழங்கப்படுகிறது. கடந்த 3.8.2022 அன்றைய நிலவரப்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் இணையப்பக்கத்தில் மகளிரால் பதிவு செய்யப்பட்ட 17,96,408 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் 2000-ம் ஆண்டில், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 30.06.2022 அன்றைய நிலவரப்படி, மொத்தம் 11,92,689 மகளிருக்கு கடன் உத்தரவாதம் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!