சைனிக் பள்ளியில் ரூ.12,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளி ஆனது தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Headmistress பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பிக்குமாறு அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Sainik School Amaravathinagar (Sainik School Amaravathinagar) |
பணியின் பெயர் | Headmistress |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Offline |
விண்ணப்பிக்கும் முறை | 31.08.2022 |
சைனிக் பள்ளி காலிப்பணியிடங்கள்:
சைனிக் பள்ளியில் காலியாக உள்ள Headmistress பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Headmistress வயது:
விண்ணப்பதாரர்கள் 01.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
TN Job “FB
Group” Join Now
Headmistress கல்வி:
Headmistress பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணிக்கு தேவையான பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
Headmistress அனுபவம்:
- ஆங்கில வழி கல்வியில் LKG முதல் 5 ம் வகுப்பு வரை ஆசிரியர் ஆக போதிய ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பேச மற்றும் எழுத தெரிந்தவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பள்ளி குழந்தைகளை சமாளிப்பதில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
சைனிக் பள்ளி தேர்வு செய்யும் முறை:
Headmistress பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சைனிக் பள்ளி ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் தகுதியான நபருக்கு ரூ.12,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
சைனிக் பள்ளி விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை Officer Incharge, Amar Sainik School, Amaravathinagar (Tamilnadu) என்ற அலுவலக முகவரிக்கு இறுதி நாளுக்குள் (31.08.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.