Bharat Gas சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – முன்பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

0
Bharat Gas சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - முன்பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
Bharat Gas சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - முன்பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
Bharat Gas சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – முன்பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எல்பிஜி சிலிண்டர் கேஸ் முன்பதிவு செய்யும் முறையை இலவச தொலைபேசி அழைப்பு மூலம் மிகவும் எளிதாக்கி இருக்கிறது. இந்த முறையை பயன்படுத்தி LPG கேஸ் சிலிண்டர்களுக்கு எப்படி முன்பதிவு செய்யலாம் என்ற விவரங்களை காண்போம்.

LPG கேஸ் முன்பதிவு

முன்பெல்லாம் எல்பிஜி சிலிண்டர்களை வாங்குவதற்கு கேஸ் ஏஜென்சிக்கு சென்று சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதற்கு பிறகு, சிலிண்டர் டெலிவரி செய்யும் போது பயனர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்து பணம் செலுத்தும் முறை மிகவும் எளிதாகிவிட்டது. அந்த வகையில் தற்போது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனம் இந்த செயல்முறையை இன்னும் எளிதாக்குவதற்கான ஒரு செயல்முறையை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு – முதல்வரின் பதிலடி!

அதன் படி இப்போது பயனர்கள் முன்பதிவு மற்றும் பணம் செலுத்த இணைய வசதி தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, பாரத் பெட்ரோலியம், LPG சிலிண்டர் கேஸ் நுகர்வோருக்கு குறிப்பாக ஸ்மார்ட்போன் அல்லது இணையம் இல்லாதவர்களுக்கு குரல் அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்காக நிறுவனம் அல்ட்ராகேஸ் டெக்னலாஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இப்போது BPCL நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் கிராமப்புறங்களில் வசிக்கும் நான்கு கோடிக்கும் அதிகமான நுகர்வோர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எல்பிஜி சிலிண்டர்களை பெற ஸ்மார்ட்போன் அல்லது இணைய அணுகல் இல்லாத BPCL வாடிக்கையாளர்கள், UPI 123PAY மூலம் பணம் செலுத்த முடியும். இந்த UPI 123PAY சேவையானது கடந்த வாரத்தில் RBI கவர்னரால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் BPCL ஆனது UPI 123PAY அடிப்படையில் இந்த சேவையை நுகர்வோருக்கு வழங்கும் முதல் நிறுவனமாக மாறியுள்ளது.

தொலைபேசி மூலம் LPG சிலிண்டரை பதிவு செய்ய:

தொலைபேசியை பயன்படுத்தி BPCLல் இருந்து எரிவாயு சிலிண்டரை ஆர்டர் செய்ய 080-4516-3554 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும். இந்த எண்ணின் மூலம் நீங்கள் எரிவாயு சிலிண்டரை மிக எளிதான படிகளில் பதிவு செய்யலாம். மற்றும் பாதுகாப்பான முறையில் பணம் செலுத்தலாம். இது குறித்து BPCL நிர்வாக இயக்குனர் சந்தோஷ் குமார் கூறுகையில், ‘இந்தியாவில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான ஃபீச்சர் போன் பயனர்கள் உள்ளனர். அதனால் உஜ்வாலா யோஜனா போன்ற திட்டங்கள் மூலம் நகர்ப்புறங்களில் எல்பிஜி பயன்பாட்டை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த வசதி கிராமப்புறங்களின் விரிவாக்கத்திற்கு உதவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!