WhatsApp பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – Fake News கண்டுபிடிப்பது எப்படி?

0
WhatsApp பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் - Fake News கண்டுபிடிப்பது எப்படி?
WhatsApp பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் - Fake News கண்டுபிடிப்பது எப்படி?
WhatsApp பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – Fake News கண்டுபிடிப்பது எப்படி?

உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டு வருவதால் தகவல்களை பரிமாறுவதற்கு அதிகமான ஆப்கள் உள்ளன. இருப்பினும் வாட்ஸ்அப் என்ற ஆப் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த ஆப் வருகைக்கு பின்னர் தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக் கொள்வதும் இயல்பான ஒன்றாகி விட்டது.

வந்தாச்சு புது வசதி:

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போனும், வாட்ஸ் அப்பும் இல்லாத இளைஞர்களை பார்ப்பது அரிது எனலாம். ஏனெனில் அலுவலக வேலை முதல் கொண்டு நண்பர்களுடன் கலந்துரையாடுவது வரை வாட்ஸ்அப்பில் தான் நடக்கிறது. ஏன் காலையில் எழுந்ததும் யார் என்ன ஸ்டேட்டஸ் வைக்கிறார்கள், பிடித்தமானவர்களுக்கு குட் மார்னிங் முதல் இரவு தூங்கும்போது குட் நைட் சொல்லி தூங்கும் பலரும் உண்டு. இதற்கு இளைஞர்கள் மட்டும் அல்ல, வயதானவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வாட்ஸ் அப் செயலியில், பல சாதகங்கள் உள்ளது இருப்பினும், சில மோசடிகளும் நடக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் செய்தித்தாள் அல்லது தொலைக்காட்சிக்கு ஈடாக தினம் தோறும் அதிகமான தகவல்கள் செயலியில் வந்து சேருகின்றன. மேலும் வாட்ஸ்அப்பில் எண்ணற்ற குரூப்களில் மெம்பர்களாக இருந்தால், குரூப்களில் வந்து குவியும் செய்திகளை படிக்க நேரம் இல்லாமல், நாம் அதை ‘ஜஸ்ட் ஓப்பன்’ செய்துவிட்டு கடந்து செல்வதும் உண்டு. மேலும் வாட்ஸ்அப்பில் உண்மைச் செய்திகளுடன் பல போலி செய்திகளும் வருவது உண்டு. இதற்குத்தான் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. அதாவது வெவ்வேறு செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து இந்த சேவையை வாட்ஸ்அப் தொடங்கியிருக்கிறது.

மீண்டும் முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை – கொரோனா பரவலை தடுக்க அரசு உத்தரவு!

இந்த வகையில் வாட்ஸ் அப்பில் வரும் செய்தி, ஃபோட்டோ, வீடியோ, வைரல் செய்தி அல்லது வாய்ஸ் பதிவு குறித்து சந்தேகங்கள் இருந்தால், அந்த குறிப்பிட்ட செய்தியை, பூம் – +91 77009-06111 / +91 77009-06588, ஃபேக்ட் கிரெசெண்டோ – +91 90490 53770, ஃபேக்ட்லி – +91 92470 52470, இந்தியா டுடே – +91 7370-007000, நியூஸ்செக்கர் – +91 99994 99044 நியூஸ் மொபைல் – +91 11 7127 9799, குயிண்ட் வெப்கூப் – +91 96436 51818, தி ஹெல்தி இந்தியன் ப்ராஜக்ட் – +91 85078 85079, விஸ்வாஸ் நியூஸ் +91 92052 70923 / +91 95992 99372 என்ற எண்களுக்கு பார்வார்டு செய்தால், செய்தியின் உண்மை தன்மையை அறியலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!