தமிழகத்தில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு – அரசு வெளியீடு!

0
தமிழகத்தில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு - அரசு வெளியீடு!
தமிழகத்தில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு - அரசு வெளியீடு!
தமிழகத்தில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு – அரசு வெளியீடு!

இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று தகுதிவாய்ந்த மாணாக்கர்கள் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதுநிலை பட்டப்படிப்பு:

தொழில் நுட்பக் கல்வி இயக்கம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எம்.பி.ஏ./எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வரவேற்கப்படுகின்றன. இதில் 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான சேர்க்கையில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று தகுதிவாய்ந்த மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம், வட்டார மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம்.

தமிழக பொது மக்களுக்கு ‘இது’ இலவசம் – அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!

சென்னை பல்கலைக் கழகம், இதர பல்கலைக் கழகங்கள், சுயநிதி பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இணையத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக தேவையான சான்றுகளுடன் விண்ணப்பித்தல் வேண்டும்.

Exams Daily Mobile App Download

இவ்வாறு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் நாளை முதல் வரும் 5ம் தேதி வரை நடைபெறும். இணையத்தில் விண்ணப்பிப்பவர்கள் பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரேடிட் கார்டு, நெட் பேங்கிங் இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்த முடியும். மேலும், இந்த கல்வியாண்டில் எம்.பி.ஏ/எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு நடைமுறைகளான விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி தேர்ந்தெடுத்தல், தற்காலிக மற்றும் இடைக்கால ஒதுக்கீட்டு ஆணை ஆகிய அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய www.gct.ac.in / www.tn-mbamca.com இணையதள முகவரியிலும், 0422/2451100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டும் அறிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!