
ராதிகா பேச்சை மீறும் மயூ, பாக்கியாவிடம் எரிந்து விழும் கோபி – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ சீரியல் எபிசோட்!
சின்னத்திரையில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து பார்வையாளர்களால் அதிகளவு விரும்பி பார்க்கப்பட்டு வரும் கதைக்களத்தை கொண்ட பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் நடந்த நிகழ்வுகளை ஸ்வாரஸ்யம் குறையாமல் இப்பதிவில் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி:
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி ரூமுக்கு வந்த பாக்கியா, ராதிகா நினைப்பில் இருக்கும் கோபியை பார்த்து என்னாச்சு? ஏன் இப்போல்லாம் யார்கிட்டயும் சரியா பேசக்கூட மாட்டேங்கிறீங்க? உடம்புக்கு ஏதும் முடியலயா? யாரும் ஏதும் சொன்னாங்களா? பிசினஸ்ல ஏதாச்சும் பிரச்சினையா? என கேள்வி மேல் கேள்வியை தொடர்ந்து அடுக்கினார். உடனே கோபி இப்போ உனக்கு என்ன பிரச்சனை, என்ன ஏன் கொஞ்சம் நேரம் கூட நிம்மதியா விடமாடிக்குற, நான் இல்லாமல் போனாலும் வரவேண்டிய செட்டில்மென்ட் சரியா வந்துரும் என சொல்லி எடுத்தெறிந்து பேசுகிறார்.
தமிழக ஊராட்சி துறையில் வேலை – மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
ஆனாலும் பாக்கியா கோபியை விட்ட பாடில்லை, தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். அதற்கு கோபி ஒன்னும் இல்லை பாக்கியா நான் நல்லா இருக்கேன் என்ன நினைச்சு ஃபீல் பண்ணாம தூங்கு என சொல்லி படுத்து விடுகிறார். மறுநாள் காலையில் அமைதியாக உட்காந்திருந்த கோபியை பார்த்து ஈஸ்வரி அம்மா மீண்டும் இரவு பாக்கியா கேட்ட கேள்வியையே கேட்கிறார். என்னாச்சு ஏதாச்சு பிரச்சனையா என்று. ஆனால் அம்மாவிடமும் ஏதும் சொல்லாமல் ஒன்னுமில்ல ம நீங்க கரெக்ட் டைமுக்கு மாத்திரை சாப்பிட்டு நல்லா இருந்தாலே போதும் என பேசி முடிக்கிறார். ராதிகா, அவரது மகள் மயூவை இனி நீ கோபி அங்கிள் கிட்ட பேசக்கூடாது என சொல்கிறார். ஆனால் மயூ ஏன்மா? நீங்கதானே பேச சொன்னிங்க இப்போ நீங்களே வேண்டாம் சொல்றீங்க? என எதிர்த்து கேட்கிறார்.
உடனே ராதிகா மயூவை அப்போவும் நான் தான் சொன்னேன்!இப்போவும் நான் தான் சொல்றேன்! என சொல்லி இனிமே நீ பேசக்கூடாதுன்னா கூடாதுதான் என ஆர்டர் போடுகிறார். ஆனால் மயூ கேட்பதாக இல்லை, என்னால முடியாதும்மா.. எனக்கு கோபி அங்கிளை ரொம்ப பிடிக்கும் அதனால நான் பேசாம இருக்க மாட்டேன் என சொல்லி மேல போய் விடுகிறார். அதன் பிறகு ராதிகா வீட்டுக்கு வந்த கோபி,ராதிகாவின் அம்மாவை பார்த்து பேசுகிறார். உடனே அவரது அம்மா கொஞ்சம் இப்போதைக்கு ஆற போடுங்க அப்புறம் பேசிக்கலாம் என சொல்லி சமாதானம் செய்கிறார். அதற்கு கோபி இல்லை, இப்பவே ராதிகா மாறிட்டா.. அப்புறம் என்ன சுத்தமா மறந்துருவா என சொல்லி புலம்புகிறார். அந்த சமயம் பார்த்து ராதிகா வீட்டுக்கு வர எபிசோடு முடிந்தது.