தமிழக ஊராட்சி துறையில் வேலை – மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
தமிழக ஊராட்சி துறையில் வேலை - மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
தமிழக ஊராட்சி துறையில் வேலை - மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
தமிழக ஊராட்சி துறையில் வேலை – மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Jeep Driver மற்றும் Office Assistant எனும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் எளிமையாக கொடுத்துள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் TN Rural Development (TNRD)
பணியின் பெயர் Jeep Driver, Office Assistant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TNRD Job பணியிடம்:

தற்போது வெளியான அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகில் Jeep Driver பாணிக்கு ஒரு பணியிடம் மற்றும் Office Assistant பாணிக்கு நான்கு பணியிடம் என மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

TNRD Job கல்வித்தகுதி:

Jeep Driver:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அவசியம் LMV ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

Office Assistant:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரருக்கு அவசியம் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

TNRD Job முன் அனுபவம்:

Jeep Driver பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட வாகனம் ஓட்டுவதில் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TNRD Job வயது வரம்பு:

01.07.2022 ம் தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது பூர்த்தியடைந்த்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயதாக 32 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் அவசியம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

TNRD Job ஊதிய தொகை:

Jeep Driver பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரையும் ஊதிய தொகை அளிக்கப்படும்.

Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரையும் ஊதிய தொகை அளிக்கப்படும்.

TNRD Job தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

TNRD Job விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 05.07.2022 ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும்படி அனுப்பி விண்ணப்பித்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

TNRD Job Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!