புதிதாக ஆடம்பர கார் வாங்கி பயணத்தை தொடங்கிய ‘மதுரை’ முத்து – ரசிகர்கள் வாழ்த்து!

0
புதிதாக ஆடம்பர கார் வாங்கி பயணத்தை தொடங்கிய 'மதுரை' முத்து - ரசிகர்கள் வாழ்த்து!
புதிதாக ஆடம்பர கார் வாங்கி பயணத்தை தொடங்கிய 'மதுரை' முத்து - ரசிகர்கள் வாழ்த்து!
புதிதாக ஆடம்பர கார் வாங்கி பயணத்தை தொடங்கிய ‘மதுரை’ முத்து – ரசிகர்கள் வாழ்த்து!

ஒரு காலத்தில் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்தவர் மதுரை முத்து அவர்கள். இவரை தெரியாத ஆளே இல்லை அந்த அளவுக்கு காமெடியில் அசத்தி வந்தவர். சில காலங்களுக்கு இருந்த இடம் தெரியாமல் இருந்த மதுரை முத்து தற்போது மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சி மூலமாக பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் அவர் வாங்கிய புது காருடன் ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மதுரை முத்து வாங்கிய புது கார்:

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டி என்ற ஊரில் பிறந்த மதுரை முத்து சிறு வயதில் இருந்தே மேடைப் பேச்சாளராக திகழ்ந்தார். அதன்பின், தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்த போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். அதில் கொடி கட்டி பரந்த காமெடியன் என்றால் அது மதுரை முத்து அவர்கள் தான். அவரது அன்பு மனைவி இறப்புக்கு பிறகு சிறிது காலமாக மதுரை முத்து என்ற கதாபாத்திரம் இருந்ததையே மறக்கும் அளவுக்கு மீடியாவை விட்டு விலகி இருந்தார்.

சன் டிவி ‘கயல்’ சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடுரோட்டில் செய்த சம்பவம் – வைரலாகும் வீடியோ!

பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமெடி செய்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானவர் ஆனார் மதுரை முத்து. அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக வந்த மதுரை முத்து அவரது காமெடியில் பல நாள் புதைந்து கிடந்த பொக்கிஷம் கிடைத்தது போல ஒரு பேரின்பத்தை அவரது ரசிகர்களுக்கு கொடுத்தார். இவரது காமெடியை ரசிப்பதற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

விஜய் டிவியில் கண்ணம்மாவாக அறிமுகமான ரோஷினி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

இவ்வாறு விஜய் டிவியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து தன் இடத்தை மீண்டும் அடைந்தார். இணையத்தளத்தில் படு ஆக்ட்டிவ் ஆக இருக்கும் மதுரை முத்து அவர் வாழ்க்கையில் நடக்கும் இன்ப நிகழ்வுகளை ரசிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அதில் ஒன்றாக தற்போது அவர் வாங்கியுள்ள புதிய காரில் ஏறி நிற்பது போன்ற புகைப்படத்தை ‘புது பயணம்’ என்று குறிப்பிட்ட போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இவருக்கு முன்பு மணிமேகலை. சரத், சிவாங்கி, மகேஷ், தாடி பாலாஜி என பலரும் கார் வாங்கி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!