சன் டிவி ‘கயல்’ சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடுரோட்டில் செய்த சம்பவம் – வைரலாகும் வீடியோ!

0
சன் டிவி 'கயல்' சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடுரோட்டில் செய்த சம்பவம் - வைரலாகும் வீடியோ!
சன் டிவி 'கயல்' சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடுரோட்டில் செய்த சம்பவம் - வைரலாகும் வீடியோ!
சன் டிவி ‘கயல்’ சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடுரோட்டில் செய்த சம்பவம் – வைரலாகும் வீடியோ!

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் மாஸ் காட்டி வரும் சைத்ரா நடு ரோட்டில் நாங்க வேற மாதிரி என்று கெத்து காட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். இன்றைய நாளில் ட்ரெண்டிங் என்றால் அது சைத்ரா வெளியிட்டுள்ள இந்த வீடியோ தான் என்றே சொல்லலாம்.

சைத்ரா பதிவிட்ட வீடியோ :

சன் டிவியில் கயல் சீரியலில் நடிக்கும் சைத்ரா கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தொடர் ஒன்றில் அறிமுகமாகினார். பிறகு தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரியா பவானி சங்கர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற தொடரில் மிரட்டலான வில்லியாக நடித்து மாஸ் காட்டியிருந்தார். இவ்வாறு சின்னத்திரையில் வில்லியை கூட ரசிக்க ரசிகர் கூட்டங்கள் இருக்கும் என்பதற்க்கு சைத்ரா ஒரு எடுத்துக்காட்டு ஆவார்.

விஜய் டிவியில் கண்ணம்மாவாக அறிமுகமான ரோஷினி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் மொத்த குடும்பத்தையும் தாங்கும் ஒரு பெண் பிள்ளையாக அனைத்து வீடுகளில் உள்ள அம்மாக்களின் மனதில் இடம் பெற்று வருகிறார் சைத்ரா . இவ்வாறு சின்னத்திரையில் கலக்கிய சைத்ரா ஜாக்பாட் அடித்து வெள்ளித்திரைக்கு சென்றார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை படத்தில் தல அஜித்துடன் சைபர் கிரைம் போலீசாக பல காட்சிகளில் சைத்ரா இருப்பதை கண்டு ரசிகர்கள் பலர் சைத்ராவை புகழ்ந்து வருகிறார்கள்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லைக்கு வளைகாப்பு – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் , சைத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலிமை படத்தில் இடம் பெற்றுள்ள ‘ நாங்க வேற மாறி ‘ என்ற பாடலுக்கு ரீலிஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடு ரோடு என்று கூட பார்க்காமல் செம்ம கெத்தாக துணை நடிகர் அவினாஷ் அசோக்குடன் குத்தாட்டம் ஆடியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ‘யார்ரா இது நம்ம சைத்து வா? ‘ என்று வியக்கும் வகையில் மாஸ் காட்டியுள்ளார். இன்றைய நாளின் வைரல் வீடியோ என்றால் அது நம்ம சைத்ரா ரீல்ஸ் தான்!

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!