விஜய் டிவியில் கண்ணம்மாவாக அறிமுகமான ரோஷினி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவியில் கண்ணம்மாவாக அறிமுகமான ரோஷினி வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவியில் கண்ணம்மாவாக அறிமுகமான ரோஷினி வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவியில் கண்ணம்மாவாக அறிமுகமான ரோஷினி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர ரோஷினி. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள ரோஷினி ஹோம்லியாகவும், மாடர்னாகவும் லேட்டஸ்ட் அசத்தல் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை கண்ட ரசிகர்களின் ரியாக்சன் எதிர்பாராத விதமாக உள்ளது.

ரோஷினியின் அசத்தல் வீடியோ:

விஜய் டிவியில் டிஆர்பி யில் எப்பொழுதும் முன்னணியில் இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மாவாக நடித்தவர் ரோஷினி. இவரிடம் பலர் சினிமா துறையில் எப்படி வருகை கொடுத்தீர்கள் என்ற கேள்விகளை கேட்கும் போது அவர் கூறிய பதில் என்னவென்றால், ஆரம்பத்தில் நான் கல்லூரியை முடித்தவுடன் பேங்கிங் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பணி புரிந்தேன். அங்கு சென்ற பிறகு தன்னை தானே அழகுபடுத்தி கொள்வதில் ஆர்வம் மிகுந்தது. அதை தொடர்ந்து மேக் அப் மற்றும் விதவிதமான ஆடைகள் என பல்வேறு மாற்றங்களை எனக்குள் செய்தேன்.

மதுரை மாவட்டத்தில் மார்ச் 19 ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதனால் தன்னம்பிக்கை அதிகரித்து முதலில் என் பற்களை காட்டி சிரிக்க ஆரம்பித்தேன்! அதற்கு பலர் என்னிடம் நல்ல கமெண்ட்டுகளை கொடுக்கும் போது, நிச்சயம் நிறம் எதற்கும் ஓர் தடையாக இருக்காது என்று எனக்குள் மாற்றம் உண்டாகியது. அதிலிருந்து ‘ என் கண்களுக்கு நான் தான் மிகவும் அழகு ‘ என தோன்ற தொடங்கியது. அதனால் தான் மீடியாவை செலக்ட் செய்தேன் என்று கூறினார். இவ்வாறு தமிழ் சினிமா துறையில் ஆர்வம் கொண்டவராக விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக அறிமுகமானார்.

இத்தொடரின் மூலம் மக்களின் மனதைக் கொள்ளை அடித்த சின்னத்திரை நடிகருள் ஒருவரானார் ரோஷினி. தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை அதில் நடிக்கும் நடிகைகள் வெளிர் நிறத்தில் தான் இருக்கணும் என்ற சரித்திரத்தை மாற்றியமைத்த பெருமை கண்ணம்மா ரோஷினியை சேரும். இவர் சீரியலை விட்டு விலகிய பிறகு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு வகிக்கிறார். மேலும் வெள்ளித்திரையிலும் கூடிய விரைவில் ரோஷினியை எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இவர் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது விதமாக ஹோம்லி மற்றும் மாடர்ன் உடை அணிந்து எடுக்கப்பட்ட அசத்தலான போட்டோ ஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை கண்ட ரசிகர்கள் நம்ம ரோஷினியா இது! என்று வியந்து பாசிட்டிவ் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!