உக்ரைனின் தலைநகர் கீவில் தொடர்ச்சியாக 35 மணிநேர ஊரடங்கு உத்தரவு – அரசு நடவடிக்கை!

0
உக்ரைனின் தலைநகர் கீவில் தொடர்ச்சியாக 35 மணிநேர ஊரடங்கு உத்தரவு - அரசு நடவடிக்கை!
உக்ரைனின் தலைநகர் கீவில் தொடர்ச்சியாக 35 மணிநேர ஊரடங்கு உத்தரவு - அரசு நடவடிக்கை!
உக்ரைனின் தலைநகர் கீவில் தொடர்ச்சியாக 35 மணிநேர ஊரடங்கு உத்தரவு – அரசு நடவடிக்கை!

உக்ரைனின் கீவ் நகரம் தொடர்ந்து 35 மணி நேர ஊரடங்கு உத்தரவின் கீழ் பூட்டப்பட்ட நிலையில் இருந்த போதிலும் ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் அந்நகரத்தில் பதட்டமான சூழல் நிலவி இருந்தது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

முழு ஊரடங்கு

கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் தீவிரமடைந்து வருகிறது. முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து வந்த உக்ரைனை தனது ஆளுமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பிரதமர் விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர்த்தாக்குதலை நடத்தி கொண்டிருக்கிறது. இந்த கொடூரமான தாக்குதல்களினால் பல ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், அப்பாவி மக்கள் உயிரிழந்து கொண்டிருக்க இரு நாடுகளும் இந்த போரை நிறுத்துவது போல தெரியவில்லை.

தமிழகத்தில் நாளை (மார்ச் 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

இப்போது பல வெளி நாடுகளின் உதவியால் தன்னை விட 3 மடங்கு பலம் படைத்த ரஷ்யாவுடன் போராடிக் கொண்டிருக்கும் உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி, தன்னுடைய நாட்டின் அமைதிக்காக அமெரிக்கா உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று நேற்று (மார்ச்.16) அமெரிக்க நாளுமன்ற அவையில் அமைச்சர்களுடன் உரையாற்றி இருந்தார். இந்த போரில் இதுவரை உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றி இருக்கும் ரஷ்ய படைகள் தற்போது தலைநகர் கீவ் மீது தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

மதுரை மாவட்டத்தில் மார்ச் 19 ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக உக்ரைனின் தலைநகர் கீவில் 35 மணி நேர ஊரடங்கு உத்தரவை அரசு விதித்திருந்தது. அந்த வகையில் கடந்த மார்ச் 15ம் தேதி இரவு 8 மணி முதல் விதிக்கப்பட்ட இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று (மார்ச்.17) காலை 7 மணி வரை சுமார் 35 மணிநேரத்திற்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் கீவ் நகர மேயர் கிளிட்ச்கோ ஏற்கனவே அறிவித்தபடி, ஊரடங்கு காலங்களில் மக்கள் சிறப்பு அனுமதியின்றி நகரத்தை சுற்றி வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு காலத்தில், ரஷ்ய படைகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பு சம்பவங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!