MI vs CSK போட்டிக்கான ஒரு முன்னோட்டம் – வெற்றி கணக்கை துவங்குமா மும்பை? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
MI vs CSK போட்டிக்கான ஒரு முன்னோட்டம் - வெற்றி கணக்கை துவங்குமா மும்பை? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
MI vs CSK போட்டிக்கான ஒரு முன்னோட்டம் - வெற்றி கணக்கை துவங்குமா மும்பை? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
MI vs CSK போட்டிக்கான ஒரு முன்னோட்டம் – வெற்றி கணக்கை துவங்குமா மும்பை? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

வரவிருக்கும் ஏப்ரல் 21ம் தேதியன்று நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதவுள்ளது. இந்த போட்டிக்கான ஒரு முன்னோட்டத்தை இப்பதிவில் காணலாம்.

MI vs CSK போட்டி

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ஒரு முக்கியமான போட்டி எதுவென்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் தான். ஏனென்றால் IPL போட்டிகளில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளாக வலம் வரும் இவ்விரண்டும் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் ரசிகர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த 2 அணிகளுக்கும் தான் உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இப்படி இருக்க இந்த 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதும் அந்த நாள் இன்னும் ஒரு சில தினங்களில் வர இருக்கிறது.

தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

அந்த வகையில் IPL 2022 போட்டிகளின் 33வது லீக் ஆட்டத்தில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், வரும் மார்ச் 21ம் தேதியன்று நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் வைத்து மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை 7.30 மணிக்கு துவங்குகிறது. இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியை கூட வெல்லாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று கடைசி இடத்திற்கு மேலே இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும் ஆட்டம் மீது பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

ஏனென்றால் அடுத்த ஆட்டத்தில் இருந்து வெற்றிக்கணக்கை துவங்கினால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி தங்களை பிளேஆஃப்ஸ் பந்தயத்தில் தக்கவைத்துக்கொள்ள முடியும். அது போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இது ஒரு முக்கியமான ஆட்டமாக இருக்கும். இப்போது வரை மும்பை அணியில் ரோஹித் சர்மா முற்றிலும் ஃபார்மில் இல்லை. மேலும் ஜஸ்பிரித் பும்ரா உட்பட மற்ற பந்துவீச்சாளர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆட்டத்திலும் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சரியான சமநிலையைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது.

கடந்த இரண்டு ஆட்டங்களில் இஷான் கிஷான், டெவால்ட் ப்ரீவிஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இதுவரை வெற்றிக்காக போராடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருந்தனர். இப்போது CSK அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் ரோகித் சர்மா பேட்டிங்கில் முன்னேற வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த சீசன் மட்டுமல்லாமல் ரோஹித் சர்மா கடந்த மூன்று ஐபிஎல் பதிப்புகளில் இருந்து ஃபார்மிற்காக போராடி வருகிறார். ஒரு அணியாக மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக செயல்படுவதால் அவரது பேட் ஃபார்ம் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது மெய்யே.

ஆனால் இந்த ஆண்டு, ரோஹித்தின் மந்தமான பேட்டிங் ஃபார்ம் வெளிப்படையாக தெரிகிறது. இப்போது CSKக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டில் தைமல் மில்ஸை விட ரிலே மெரிடித் வெற்றி பெறுவதை நாம் பார்க்கலாம். மேலும், பிட் அண்ட் பீஸ்ஸில் சிறந்து விளங்கும் முருகன் அஸ்வினுக்கு பதிலாக மயங்க் மார்கண்டே ப்ளேயிங் 11 அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளது. தவிர பேட்டிங் பிரிவில் எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்படவில்லை.

MI அணியின் ப்ளேயிங் 11:
  • ரோஹித் சர்மா
  • இஷான் கிஷன்
  • டெவால்ட் ப்ரீவிஸ்
  • திலக் வர்மா
  • சூர்யகுமார் யாதவ்
  • கீரன் பொல்லார்ட்
  • ஃபேபியன் ஆலன்/டிம் டேவிட்
  • ஜெய்தேவ் உனத்கட்
  • முருகன் அஷ்வின்/மயங்க் மார்கண்டே
  • ஜஸ்பிரித் பும்ரா
  • ரிலே மெரிடித்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!