கருப்பாக இருந்து கலராக மாறியது எப்படி? ரசிகர்களின் கேள்விக்கு மைனா நந்தினி அளித்த பதில்!

0
கருப்பாக இருந்து கலராக மாறியது எப்படி? ரசிகர்களின் கேள்விக்கு மைனா நந்தினி அளித்த பதில்!
கருப்பாக இருந்து கலராக மாறியது எப்படி? ரசிகர்களின் கேள்விக்கு மைனா நந்தினி அளித்த பதில்!
கருப்பாக இருந்து கலராக மாறியது எப்படி? ரசிகர்களின் கேள்விக்கு மைனா நந்தினி அளித்த பதில்!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான துணை நடிகை மைனா நந்தினி தனது பியூட்டி டிப்ஸ் குறித்த ரகசியத்தை முதன் முறையாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

மைனா நந்தினி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்தினி. இந்த சீரியலில் நடிகை ரஷிதாவுக்கு தோழியாக மைனா என்ற கதாப்பாத்திரத்தில் துடுக்குத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் மைனா நந்தினி. சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் சில நகைச்சுவை கதாப்பாத்திரங்களுக்கு பெயர் போன மைனா நந்தினி தற்போது மீண்டுமாக சின்னத்திரை பக்கம் திரும்பி இருக்கிறார்.

ப்ரியங்காவுடன் நேருக்கு நேர் மோதும் அண்ணாச்சி, நிரூப் தலைவரானதில் கடுப்பா? பரபரப்பான ‘பிக் பாஸ்’ ப்ரோமோ!

சின்னத்திரை நடிகரான யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை நந்தினிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்காக சில காலம் மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்த இவர், விஜய் டிவியின் அரண்மனைக்கிளி, வேலைக்காரன் ஆகிய சீரியல்கள் மூலம் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். தொடர்ந்து தற்போது ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் இவர் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி வெளியிட்ட புகைப்படங்கள் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

எப்போதும் வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை நந்தினி, சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அந்த வகையில் மாநிறம் கொண்ட நந்தினி, கலராக மாறியது எப்படி என்று இவரது பியூட்டி டிப்ஸ் பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ABC ஜுஸ் தான் தனது நிறத்திற்கு காரணம் என கூறியுள்ளார். தவிர ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகியவற்றுடன் சிறிதளவு இஞ்சி மற்றும் கொத்தமல்லி என அனைத்தையும் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் குடித்தால் தோல் நிறத்தில் மாற்றம் ஏற்படும் எனவும் கூறி இருக்கிறார் நந்தினி.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!