தனிநபர் கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைவான வட்டியில் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!

0
தனிநபர் கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - குறைவான வட்டியில் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!
தனிநபர் கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - குறைவான வட்டியில் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!
தனிநபர் கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைவான வட்டியில் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!

தனிநபர் கடன்கள் என்பது மிக எளிதாக வாங்கக் கூடிய ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதே வீட்டுக் கடன், அடமானக் கடன் என அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தனிநபர் கடனை சிறந்த கடனாக பார்க்கப்படுகின்றது. இந்த கடனை 9%க்கும் குறைவான வட்டியில் வழங்கும் வங்கிகளின் பட்டியல் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

வங்கிகளின் பட்டியல்:

இன்றைய காலகட்டத்தில் பர்சனல் லோன் அல்லது தனிநபர் கடன்கள், அவசரமாக பணம் தேவைப்படும்போது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வீட்டைப் பழுது பார்ப்பது, குழந்தைகளின் கல்வி, திருமணங்கள், சிறு கடன்களைச் செலுத்துதல், உடனடி நிதி தேவைப்படும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் தேவையான நிதி இல்லாத போது தனிநபர் கடன்களைப் பயன்படுத்தலாம். மேலும் தனிநபர் கடன்கள் என்பது மிக எளிதாக வாங்கக் கூடிய ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் இன்று ஆயிரக்கணக்கான மொபைல் ஆப்கள், இணைய சேவைகள் மூலமாக தனிநபர் கடன்களை, மிக எளிதாகப் பெற்று கொள்ளலாம், இது அவசர தேவைக்கு உதவும் ஆபத்பாந்தவனாக உள்ளது.

வேகமாக பரவும் எக்ஸ்இ (XE) எனும் புதிய வகை கொரோனா வைரஸ் – பீதியில் மக்கள்! WHO எச்சரிக்கை!

வங்கிகள், நிதி நிறுவனங்கள் என பலவும் தனிநபர் கடன்கள் வழங்க மிக ஆர்வம் செலுத்துகின்றனர். குறிப்பாக உடனடியாக கடன் வழங்கும் சேவையை பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. குறிப்பாக இணையத்தின் மூலமாகவும் இந்த சலுகைகளை உடனடியாக ஆதார் கார்டு அப்டேட் செய்தும் பெற்றுக் கொள்ளும் வசதிகளும் வந்துவிட்டன. இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் தோராயமாக 8.9% முதல் 24% வரை உள்ளன. ஒரு நபர் வாங்கும் கடன், கிரெடிட் ஸ்கோர், தேவை என்ன என்பதைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு ரூ 5 லட்சம் ரூபாய்க்கு, 5 வருட கால அவகாசத்தில் வட்டி விகிதம், மாத தவணை தொகை ஒவ்வொரு வங்கிகளில் மாறுபடும்.

  • பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் – வருடத்திற்கு வட்டி விகிதம் 8.90% – தவணை தொகை – ரூ.10,355
  • யூனியன் வங்கியில் வட்டி விகிதம் – வருடத்திற்கு வட்டி விகிதம் 8.90% – தவணை தொகை ரூ.10,355

  • சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா – வருடத்திற்கு வட்டி விகிதம் 8.90% – தவணை தொகை ரூ.10,355
  • இந்தியன் வங்கி – வருடத்திற்கு வட்டி விகிதம் – 8.50% – தவணை தொகை ரூ.10,258
  • பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி – வருடத்திற்கு வட்டி விகிதம் – 9.50% – தவணை தொகை ரூ.10,501
  • ஐடிபிஐ வங்கி – வருடத்திற்கு வட்டி விகிதம் – 9.50% – தவணை தொகை ரூ.10,501
  • பாங்க் ஆப் மகாராஷ்டிரா Vs எஸ்பிஐ Vs பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆப் மகாராஷ்டிரா – வருடத்திற்கு வட்டி விகிதம் – 9.55% – தவணை தொகை ரூ.10,513
  • எஸ்பிஐ – வருடத்திற்கு வட்டி விகிதம் – 9.60% – தவணை தொகை ரூ.10,525

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here