நாடு முழுவதும் 36 மணி நேர முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

0
நாடு முழுவதும் 36 மணி நேர முழு ஊரடங்கு அமல் - அரசு அதிரடி உத்தரவு!
நாடு முழுவதும் 36 மணி நேர முழு ஊரடங்கு அமல் - அரசு அதிரடி உத்தரவு!
நாடு முழுவதும் 36 மணி நேர முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

இலங்கையில் அவசர நிலையை தொடர்ந்து இன்று முதல் நாளை மறுநாள் காலை வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

அதிரடி உத்தரவு:

கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகமே அதிக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வகையில் இலங்கையில் இன்று வரை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு உள்ளது. இந்த வகையில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில் நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது.

தனிநபர் கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைவான வட்டியில் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!

இதை அடுத்து பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இலங்கை கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு உள்ளன. வரலாற்றில் இல்லாத அளவு இலங்கை நிலைக்குலைந்து உள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பொருளாதார நெருக்கடிகளுக்கு அதிபர் அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகளே காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கொழும்பு நகரில் நேற்று காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் போராட்டம் மீண்டும் நடைபெறாமல் இருக்க கொழும்பு நகர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரத்தில் பெரும் போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாலும் போராட்டங்களை கடுமையாக ஒடுக்கவும் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 36 மணி நேரம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பொது இடங்களில் கூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் யாரையும் புகாரின்றி கைது செய்யவும், தடுப்புக் காவலில் வைக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!