தமிழகத்தில் நாளை மறுநாள் (மே 13) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு!
தேனி மாவட்டம், வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வரும் நாளை மறு நாள் (மே 13ம் தேதி) சிறப்பாக நடைபெற உள்ளன. இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு 13ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் மற்ற மாவட்டங்களில் இருந்தும், கேரளத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பார்கள். மேலும் அக்கினிச் சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி எடுத்து அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தி வழிபடுவா். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா எதிரொலியால் கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற வில்லை. தற்போது நோய் தாக்கம் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதன்படி, கடந்த மாதம் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடப்பு ஆண்டு நடைபெற உள்ள நிலையில், கடந்த ஏப்.20-ஆம் தேதி கோயிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி, வரும் மே.17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக நேற்று மலா் விமானத்தில் அம்மன் கோயிலுக்கு பவனி வருதல், இன்று முத்துப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மே 12-ஆம் தேதி புஷ்பப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மே 13, 15 ஆகிய தேதிகளில் ரத வீதிகளில் தேரோட்டம் மற்றும் தேருக்கு சிறப்பு பூஜை, மே 16-ஆம் தேதி தோ் நிலைக்கு வருதல், முத்துச் சப்பரத்தில் அம்மன் திருத்தோ் தடம் பாா்த்தல் ஆகியவை நடைபெறுகிறது. மேலும் மே 17-ஆம் தேதி ஊர் பொங்கல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறைதீர் முகாம் குறித்த அறிவிப்பு!
இந்நிலையில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு மே 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நாளை மறு நாள் (மே 13 ஆம் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம்( மே 13 ) மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு உள்ளூா் விடுமுறை, இருப்பினும் பள்ளி பொதுத் தோ்வு வழக்கம் போல நடைபெறும். மேலும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மே 28-ம் தேதி(சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.