அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறைதீர் முகாம் குறித்த அறிவிப்பு!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - குறைதீர் முகாம் குறித்த அறிவிப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - குறைதீர் முகாம் குறித்த அறிவிப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறைதீர் முகாம் குறித்த அறிவிப்பு!

இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு கருதப்படுகிறது. தமிழகத்தில், அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்க, இருப்பிட சான்றுக்கான முக்கிய ஆவணமாகவும் ரேஷன் கார்டு பயன்படுகிறது. இந்நிலையில் பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கார்டுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான குறைதீர் முகாம், அந்தந்த வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் ஸ்மார்ட் கார்டு மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சென்றால் ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்ட்டை, ரேஷன் கடை ஊழியரிடம் இருக்கும் பாயிண்ட் ஆப் சேல் மிஷின் ஸ்கேன் செய்து,அதன் பின்பு தேவையான பொருட்கள் உணவுப் பொருட்கள் வழங்கப்படும். இந்த நடைமுறையின் மூலம் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர், அவரது குடும்ப உறுப்பினர் மட்டுமல்லாமல் வீட்டில் வேலை பார்ப்பவர்கள், தெரிந்தவர்கள் என யார் வேண்டுமானாலும் கார்டை காட்டி பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

TN Job “FB  Group” Join Now

இதனால் பல முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இந்த முறைகேடுகளை தடுப்பதற்கு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் கருவி மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்து, இந்த பயோமெட்ரிக் முறையானது கடந்த 1.10.2020 முதல் நடைமுறையில் உள்ளன. மேலும் கொரோனா நிவாரண நிதி, பொங்கல் பரிசு தொகுப்பு போன்றவைகள் ரேஷன் அட்டை வாயிலாக தான் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டையை பெறுவதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன. புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து, சில நடைமுறை சிக்கல் காரணமாக ரேஷன் அட்டை பெறுவதற்கு பல மாதங்கள் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ராதிகா உடன் போன் பேச முடியாமல் தவிக்கும் கோபி, இன்னும் சிலரை அழைக்க திட்டமிடும் பாக்கியா – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

ரேஷன் அட்டையில் ஏற்படும் சிறிய அளவிலான பிழைகளை திருத்துவதிலும் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சனைக்ளும் உள்ளன. இதை தவிர்க்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை தோறும் அந்தந்த வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் , குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமின் முக்கிய நோக்கம், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான நடைமுறைகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு அளிப்பதுதான். எனவே பொது மக்கள் இந்த குறைதீர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!