தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார் – தலைவர்கள் இரங்கல்!

0
தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார் - தலைவர்கள் இரங்கல்!
தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார் - தலைவர்கள் இரங்கல்!
தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார் – தலைவர்கள் இரங்கல்!

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று டிசம்பர் 4ம் தேதி உயிரிழந்துள்ளார். அவர் மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் ஆளுநர் மரணம்:

ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் வெமுரு கிராமத்தில் 1933ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி பிறந்தவர் தான் ரோசய்யா. இவர் குண்டூர் இந்துக் கல்லூரியில் வணிகவியல் பயின்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1968, 1974 மற்றும் 1980ம் ஆண்டுகளில் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறாக அவர் அரசியலில் கடந்து வந்த பாதைகள் ஏராளம். பின்னர் முதன் முறையாக மரி சென்னா ரெட்டி அரசியலில் சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA 28% அதிகரிப்பு – இரட்டை போனஸ் வாய்ப்பு!

இங்கு தான் அவரது முதல் அரசியல் பயணம் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் பல முதலமைச்சர்களின் அமைச்சகங்களில் பல முக்கிய இலாகாக்களை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு முன்னர் தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் 2009 முதல் 2011 வரை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு!

இவ்வாறாக அரசியலில் மிகுந்த அனுபவம் கொண்ட ரோசய்யா அவர்கள் 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார். பின்னர் ஹைதராபாத்தில் அவரது குடும்பத்துடன் வசித்து வந்த தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா அவர்கள் நீண்ட நாள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று டிசம்பர் 4ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். தற்போது இவருக்கு வயது 88 என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!