நடிகை காஜல் அகர்வால் ஆண் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல் – ரசிகர்கள் வாழ்த்து!

0
நடிகை காஜல் அகர்வால் ஆண் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல் - ரசிகர்கள் வாழ்த்து!
நடிகை காஜல் அகர்வால் ஆண் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல் - ரசிகர்கள் வாழ்த்து!
நடிகை காஜல் அகர்வால் ஆண் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல் – ரசிகர்கள் வாழ்த்து!

வெள்ளித்திரையின் முன்னணி மற்றும் பிரபல நடிகையுமான காஜல் அகர்வால் கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது க்யூட்டான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தையின் முகத்தை காஜல் ரசிகர்களுக்காக இணையத்தில் வெளியிட்டு அறிமுகப்படுத்தியுள்ளார்.

காஜல் அகர்வால்:

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மாஸ் காட்டி வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், முதலில் நடிகர் பரத்துடன் இணைந்து ”பழனி” என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு கால்தடம் பதித்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பொம்மலாட்டம், நான் மஹான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மெர்சல், கோமாளி ஆகிய பல தமிழ் ஹிட் திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகும் நடிகையாக மாறினார்.

பாவனி மீதுள்ள காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமீர் – அவரே வெளியிட்ட பதிவு!

தமிழ் திரையுலகில் அறிமுகமான சில வருடங்களிலேயே அனைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபரான கவுதம் கிச்சுலு என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படங்களும் அப்போதே வெளியாகி செம வைரலானது. திருமணத்திற்கு பிறகு காஜல் திரைப்படங்களில் நடிக்க அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. என்றாலும் தொடர்ந்து போட்டோ சூட் பல செய்து இணையத்தில் ஷேர் செய்துதான் வந்தார்.

இவ்வாறு சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் காஜல், கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 19 நடிகை காஜல் மற்றும் கௌதமிற்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்த தகவல் இணையத்தில் காட்டு தீயை விட வேகமாக பரவி வைரலானது. ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து மழையை பொழிந்து வருகினறனர். மேலும், தற்போது குழந்தையின் முகத்தையும் இணையத்தில் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!