
“என்னுடைய நிலைமைக்கு நீங்க தான் காரணம்” கார்த்திக்கிடம் கோவப்பட்ட சத்யா – “மௌன ராகம் 2” ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “மௌன ராகம் 2” சீரியலில் சத்யா, வருண் சந்தேகப்பட்டதால் வீட்டை விட்டு வெளியே வருகிறார். அப்போது கார்த்திக் அவரை சந்திக்க வர உங்களால் தான் நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன் என சத்யா கோவமாக பேசிவிடுகிறார்.
மௌன ராகம் 2:
மௌன ராகம் 2 சீரியலில் சத்யாவை நிம்மதியாக இருக்க விடக் கூடாது என்பதால் ஸ்ருதி மற்றும் ஷீலா பல வேலைகளை செய்கிறார். வருணிடம், தருண் சத்யாவும் ஒருத்தரை ஒருத்தர் காதலித்தார்கள் என பொய் சொல்ல தன்னுடைய மனைவியை பற்றி நம்பாமல் வருண் சத்யா மீது கோவமாக இருக்கிறார். சத்யாவிற்கு ஏன் வருண் இப்படி நடந்து கொள்கிறார் என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். பின் வருண் சத்யா சாப்பாட்டை சாப்பிடாமலும் அவரிடம் பேசாமலும் இருக்க கோவப்பட்ட சத்யா என்ன பிரச்சனை என கேட்கிறார்.
நடிகை காஜல் அகர்வால் ஆண் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல் – ரசிகர்கள் வாழ்த்து!
அப்போது வருண் நீயும் தருணும் காதலித்தது எனக்கு தெரியும் என சொல்ல தம்பியை காதலித்துவிட்டு என்னை திருமணம் செய்ய எப்படி மனம் வந்தது என வருண் கேட்கிறார். உடனே கோவப்பட்ட சத்யா இப்படி ஒவ்வொன்றிற்கும் சந்தேகப்படும் ஒருவருடன் என்னால் வாழ முடியாது என சொல்லி வீட்டை விட்டு கிளம்புகிறார். வரும் வழியில் கார்த்திக் சத்யாவை பார்க்க எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தாய் என கேட்கிறார்.
கோவமாக இருந்த சத்யா என்னுடைய இந்த நிலைமைக்கு நீங்க தான் காரணம் என சொல்கிறார். சிறு வயது முதல் நான் பட்ட கஷ்டத்திற்கு நீங்க தான் காரணம், இப்போதும் நான் கஷ்டம் தான் படுகிறேன். போவதற்கு இடம் இல்லாமல் நான் ரோட்டிற்கு வந்துவிட்டேன் இதற்கெல்லாம் யார் காரணம் நீங்க தான் என சொல்ல கார்த்திக் வீட்டிற்கு வா பேசலாம் என சொல்கிறார். உங்க வீட்டிற்கு வந்து நான் என்ன செய்ய என சத்யா கார்த்திக்கிடம் கோவமாக கேள்விகளை கேட்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.