பாவனி மீதுள்ள காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமீர் – அவரே வெளியிட்ட பதிவு!
பாவனியும், அமீரும் அடிக்கடி சந்தித்து கொண்டே வருவதால் இருவரும் காதலிக்கிறார்கள் என பல கிசுகிசுக்கள் வந்துகொண்டிருந்த நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியாக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பாவனி & அமீர்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் பாவனி. இந்த சீரியலுக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 ல் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தான் பாவனியும் அமீரும் சந்தித்து கொண்டனர். அமீர் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக 50 ஆவது நாளில் தான் நுழைந்தார். வீட்டிற்குள் வந்த முதல் நாளில் இருந்தே பாவனியுடன் மட்டுமே அமீர் நேரத்தை செலவிட்டு வந்தார்.
விஜய், சன் டிவி சீரியல்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் – வைரலாகும் மீம்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
அதுமட்டுமல்லாமல் தனிமையிலேயே இருவரும் பேசி கொண்டிருந்ததால் இருவரும் காதலிப்பதாக பல கிசுகிசுக்கள் வந்தன. மற்ற போட்டியாளர்களுமே இருவரும் காதலிக்கிறார்களோ என கிசுகிசுத்தனர். இதற்கு பிறகு அமீரிடம் இருந்து பாவனி ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த விவகாரம் மேலும் கிசுகிசுவை அதிகப்படுத்தியது. பாவனியும் அமீரும் பிக் பாஸ் வீட்டில் கடைசி நாள் வரை தாக்கு பிடித்தனர்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் கூட பாவனியும் அமீரும் அவ்வப்போது சந்தித்து கொண்டே தான் இருந்தனர். இவர்கள் அடிக்கடி சந்தித்து கொண்டே இருப்பதால் இருவரும் காதலிக்கிறார்கள் என மேலும் கிசுகிசுக்கள் அதிகமாயின. இருவரும் இணைந்து பல இன்டெர்வியூ கூட அட்டென்ட் செய்திருக்கிறார்கள். இந்நிலையில், அமீர் இந்த வதந்திகளை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் தான் என கூறும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.