விஜய், சன் டிவி சீரியல்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் – வைரலாகும் மீம்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய், சன் டிவி சீரியல்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் - வைரலாகும் மீம்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய், சன் டிவி சீரியல்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் - வைரலாகும் மீம்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய், சன் டிவி சீரியல்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் – வைரலாகும் மீம்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி மற்றும் சன் டிவியில் விறுவிறுப்பை அதிகரிக்க ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் முன்னணி சீரியல்கள் பல நெட்டிசன்களால் அதிகம் கலாய்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மாதிரி மீம்ஸ்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வைரலாகும் மீம்ஸ்:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி ரோடு ரோடாக நடக்கும் சீன்கள் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ் உருவாக காரணமாக இருந்தது. அதுவே இந்த சீரியலை அனைத்து வயதினரையும் பார்க்கும் படி செய்தது. அதற்கு பின் வாரந்தோறும் டாப் சீரியல்களில் உள்ள காட்சிகளை வைத்து மீம்ஸ் வெளியாகி வருகிறது.

விஜே மணிமேகலை பைக்கை திருடி CCTV இல் சிக்கிய திருடன் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் தற்போது TRP ரேட்டிங்கில் அதிகமாக சன் டிவி சீரியல்களே இருக்கும் நிலையில் அதிகம் கலாய்க்கப்படும் சீரியலாக அவை தான் இருக்கின்றன. மேலும் விஜய் டிவியில் வழக்கம் போல பாரதி கண்ணம்மாவும், தமிழும் சரஸ்வதியும் சீரியலும் அதிகம் கலாய்க்கப்பட்டு வருகிறது. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சந்திரகலா சரஸ்வதியை அவமானப்படுத்த, ஆனால் சரஸ்வதி நான் இன்னும் 4 நாட்களில் சமைத்து காட்டுவேன் இல்லை என்றால் அந்த வீட்டை விட்டு வெளியே செல்வேன் என சபதம் போடுகிறார்.

அதனால் இது தமிழும் சரஸ்வதியுமா இல்லை சரஸ்வதி சபதமா என மீம்ஸ் மூலம் கலாய்த்து இருக்கின்றனர். அதன் பின் பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதியை பற்றி சகலகலா டாக்டர் என பதிவிட அவனே ஒரு சைக்கோ என மீம்ஸ் மூலம் கலாய்த்து இருக்கின்றனர். இந்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் பார்ப்பதை விட இந்த மீம்ஸை பார்த்தே கதையை பலர் தெரிந்து கொள்வது குறிப்பிடத்தக்கது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here